திங்கள், 25 ஆகஸ்ட், 2014

கற்பகவிநாயகர் கோவில் ,பிள்ளையார்பட்டி














சிவகங்கை மாவட்டம் திருபத்தூர் குன்றக்குடி சாலையில் இருக்கிறது பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவில்.சாலையிலேயே கோவிலின் தோரண வாயில் இருக்கிறது . அங்கிருந்து சுமார் அரை கி.மீ தூரத்தில் உள்ளது கோவில் .கோவிலுக்கு முன் தெப்பகுளம் உள்ளது .இது ஒரு குடைவரை கோவில் . மலையை குடைந்து சுமார் 2 மீட்டர் உயரமுள்ள கற்பகவிநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 1600 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை இந்த கோவில் . கற்பகவிநாயகர் வலம்சுழி விநாயகர் . தும்பிக்கை வலது புறமாக சுழித்துக்கொண்டிருக்கும்  விநாயகரின்  வலது கையில் சிவலிங்கம் இருப்பதை காணலாம் . இங்கு சுவாமியின் திருநாமம் மருதீசர் .திருவீசர் என்றும் அழைக்கபடுகிறார். அம்மன் திருநாமம் வாடாமலர்மங்கை . அம்மனுக்கு சிவகாமி என்று மற்றொரு திருநாமமும் உண்டு .

அம்மனுக்கு சிவகாமி என்று மற்றொரு திருநாமமும் உண்டு . தக்ஷிணாமூர்த்தி ,முருகபெருமான் ,லக்ஷ்மி ,சரஸ்வதி ,துர்க்கை ,நவகிரகங்கள் ,ஆஞ்சநேயர் சன்னதிகளும் சுற்று பிரகாரத்தில் உள்ளன . விநாயகர் சதுர்த்தி மிக விமரசியாக 9 நாள் விழாவாக இங்கு கொண்டாட படுகிறது . மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் முக்குருணி விநாயகருக்கு சதுர்த்தியன்று முக்குருணி (18 படி ) மாவில் மோதகம் செய்து படைப்பது போல பிள்ளையார்பட்டியிலும் படைக்கபடுகிறது விநாயக சதுர்த்தியன்று கற்பகவினாயகரை தரிசிப்பது மிகவும் விசேஷம் .அன்று பிள்ளையார்பட்டியில் பக்தர்கள் கூட்டம் கட்டுகடங்காமல் இருக்கும்.

கருத்துகள் இல்லை: