வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

மங்கேஷ் கோவில் ,கோவா


மங்கேஷ் கோவிலும் ஒரு சிவன் கோவில் தான் . தற்பொழுது இந்த கோவில் இருப்பது கோவாவில் உள்ள போண்டா என்ற தாலுக்கில் .ஆனால் 15ஆம் நூற்றாண்டு வரை இந்த கோவில் இருந்தது இன்று கொர்டலிம் என்று அறியப்படும் இடத்தில் தான் இருந்தது . இந்த கோவில் 24 பிராமண குடும்பங்களின்  கட்டுபாட்டில் தான் இருந்தது . ஆனால் அப்பொழுது இந்து கோவிகளை போர்த்துகீசியர்கள் அழித்து வந்ததால் இந்த குடும்பத்தினர் சுவாமி சிலைகளை பத்திரமாக எடுத்து வந்து இப்பொழுது இருக்கும் இடத்தில் வைத்து பூஜை செய்து வந்தனர் .பின்பு அந்த இடத்திலேயே இப்பொழுத் இருக்கும் பிரமாண்டமான கோவிலை எழுப்பினர் . இயற்க்கை அழகு சூழ்ந்த இடத்தில் இந்த கோவில் தற்பொழுது அமைந்துள்ளது . கொங்கனி பாணியில் இங்கும் தீபஸ்தம்பம் உள்ளது .அப்பொழுது இந்த ஊர் போர்த்துகீசிய ஆட்சியின் கீழ் இல்லாமல் இருந்தது .முக்கிய சாலையில் இருந்து கோவிலுக்கு செல்ல நீண்ட வழி ஓன்று இருக்கிறது . அந்த சாலை வழியே நடந்து தான் கோவிலுக்கு செல்ல வேண்டும் .வாகனம் செல்ல தக்க வகையில் பக்கத்திலேயே வேறு ஒரு பாதை இருந்தாலும் பெரும்பாலும் எல்லோரும் நடந்து தான் செல்கிறார்கள் . கோவில் மிக அழகாக உள்ளது .சிவனுக்கு தங்க கவசம் சார்த்தியிருந்தார்கள் .சிவ பெருமானின் தலைக்கு மேல நரசிம்மர் வேறு உள்ளது .சுவாமி அலங்காரம் மிகவும் நன்றாக செய்திருந்தார்கள் . இந்த கோவிலின் கட்டிடக்கலையில் இந்திய ,போர்த்துகீசிய மற்றும் இஸ்லாமிய கட்டிடகலை பார்க்கலாம் .பிரபல  இந்தி பின்னணி பாடகிகள் லதா மங்கேஷ்கர் ,ஆஷா மங்கேஷ்கர் இந்த மங்கேஷ் ஊரை சேர்ந்தவர்கள் தான் .




கருத்துகள் இல்லை: