வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

நாகேஷ் கோவில் , மகாலட்சுமி கோவில் ,கோவா .

Nagesh Maharuththirar 

Nagesh temple ,Goa


நீண்ட இடைவெளிக்கு பின் நான் சென்று வந்த கோவில்கள் பற்றி மீண்டும் எழுத துடங்கியுள்ளேன் . இந்த பதிவில் கோவாவில் நாங்கள் பார்த்த நாகேஷ் கோவில் மற்றும் மகாலட்சுமி கோவில் பற்றி எழுதியுள்ளேன் . இந்த சிவன் கோவில் பஞ்சிம் நகரிலிருந்து சுமார் 35 கி.மீ தொலைவில் உள்ளது .கோவில் இருக்கும் கிராமத்தின் பெயர் பண்டோரா .இங்குள்ள இந்து கோவில்களின் கட்டிடகலை சற்று வித்தியாசமாக உள்ளது. சிறிது கேரளா கோவில்கள் பாணியிலும், சில கோபுரங்கள் முஸ்லீம் பாளிவாசல்களில் காண்பவை ( மினார் போன்றவை )போன்றும் தோற்றமளிக்கிறது . ஆனால் இவை எல்லாம் பழமை வாய்ந்த இந்து கோவில்கள் தான் .கோவில் இருக்கும் கிராமத்தின் பெயர் பண்டோரா ..நாகேஷ் மகாருத்திரர் என்றது தான் சுவாமியின் திருநாமம் . அது தவிர லக்ஷ்மி நாராயணன் மற்றும் கணபதி சன்னதிகளும் உண்டு .கோவிலின் முன்புறம் அழகான தெப்பகுளம் உள்ளது . கோவிலின் முகப்பு தோற்றம் தெப்பகுள நீரில் அழகாக தெரிகிறது .இங்குள்ள சிவலிங்கம் சுயம்புவாக தோன்றியது . இங்குள்ள ஒரு தோப்பில் ஒரு பசு தினமும் சென்று லிங்கம் மேல் பால் சொரியுவதை பார்த்த மேய்ப்பவன் தான் இந்த லிங்கத்தை முதன் முதலில் பார்த்தவன் . அதே தோப்பில் உமா ,மகேஸ்வரன் மற்றும் கணபதி சிலைகளும் இருந்தன . தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்த சுவாமி சிலைகள் 6 அல்லது 7 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவையாக இருக்கலாம் என்று சொல்லியுள்ளார்கள் .இந்த கோவிலின் தீபஸ்தம்பம் வித்தியாசமாக ஐந்து நிலைகள் கொண்டதாக இருக்கிறது .இவையெல்லாம் கொங்கணி பாணியில் கட்டப்பட்டவை .



Mahalakshmi temple ,goa 
நாகேஷ் கோவிலின் அருகிலேயே மகாலக்ஷ்மி கோவில் உள்ளது . இந்த கோவிலும் மிகவும் பழமைவாய்ந்த கோவில் . கோவா கோலவா பீச்சில் தான் இந்த கோவில் ஆரம்ப காலத்தில் இருந்திருக்கிறது .போர்த்துகீசியர்கள் இந்து கோவில்களை அழிக்க ஆரம்பித்த பொழுது அங்கிருந்த இந்து பக்தர்கள் மஹாலக்ஷ்மி சிலையை அங்கிருந்து மீட்டு கொண்டுவந்து இந்த இடத்தில் ஒரு புரோஹிதர் வீட்டில் வைத்து பூஜை செய்து வந்தனர் . பின்னர் அந்த இடத்திலேயே கோவில் அமைத்து வழிபட ஆரம்பித்தனர் . பிற்காலத்தில் பல மாறுதல்க்குள்ளான அந்த கோவில் இன்று மிகவும் பிரம்மாண்டமாக திகழ்கிறது .


இந்த கோவிலிலும் கோவாவின் கட்டிடகலைகளை காணலாம். இங்கும் தீபஸ்தம்பம் வித்தியாசமாக உள்ளது .

கருத்துகள் இல்லை: