புதன், 22 ஜூலை, 2015

அருள்மிகு ஏடகநாதர் திருக்கோவில்,திருவேடகம்

அருள்மிகு ஏடகநாதர் திருக்கோவில்,திருவேடகம் 
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள அருள்மிகு ஏடகநாதர் திருக்கோவில் , திருவேடகம் என்ற ஊரில் உள்ளது. இது ஒரு பாடல் பெற்ற ஸ்தலம். வைகை நதி கரையில் அமைந்துள்ள மிக பழமையான கோவில். சம்பந்தர் இக்கோவில் குறித்து பதிகம் பாடியுள்ளார். சுவாமியின் திருநாமம் டகநாதர்,அம்பாள் பெயர் ஏலவார்க்குழலாளி. சுவாமி சுயம்பு மூர்த்தி. திருஞானசம்பந்தர் எழுதிய பதிக ஏடு ஒன்று வைகை ஆற்றின் நீரோட்டதிற்கு எதிர் திசையில் மிதந்து வந்து இங்கு ஒதுங்கியது என சொல்லப்படுகிறது. சமண மத துறவிகளுக்கும் சம்பந்தருக்கும் பாண்டிய மன்னர் சபையில் நடந்த போட்டியில் ஏடுகள் நீரில் மிதக்க விட்டதாகவும் சம்பந்தர் விட்ட ஏடு இங்கு வந்து கரை ஒதுங்கியதாலும் இந்த இடத்திற்கு திரு ஏடகம் என பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. சமண துறவிகள் நீரில் விட்ட ஏடு நீரோட்டத்தினால் அடித்து சென்று விட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த ஆலயத்திலுள்ள வாடுவென்ற விநாயகர் ஒரு மீன் வடிவத்தில் சென்று சம்பந்தர் நீரில் விட்ட ஏட்டை இங்கு தடுத்து விட்டதாக தலபுராணம் சொல்கிறது. திருபுகழிலும் இந்த ஆலயம் குறித்து சொல்லபட்டுள்ளது. சிவபெருமானை கருடன்,ஆதிஷேஷன் மற்றும் விஷ்ணு இங்கு வழிபட்டதாக சொல்லப்படுகிறது. இன்றும் ஒவ்வொரூ வைகாசி மாதமும் " ஏடு எதிரேறிய அதிசயம்' என்ற சம்ந்தர் நடத்திய அதிசய நிகழ்வை ஒரு விழாவாக இங்கு கொண்டாடுகிறார்கள். 


கருத்துகள் இல்லை: