ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

வீரபத்ரஸ்வாமி கோவில்- லேபக்ஷி

ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ளது லேபக்ஷி என்கிற சிறிய கிராமம். பெங்களூரிலிருந்து சுமார் 120 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு விஜயநகர மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட அருமையான சிவன் ,விஷ்ணு மற்றும் வீற்பத்திரஸ்வாமி கோவில்கள் உள்ளது. இங்கு பத்திரகாளி மற்றும் லக்ஷ்மிக்கும் சன்னதிகள் உள்ளது. ஒரு ஸ்தல புராண கதை இந்த கோவில் அகஸ்திய முனிவரால் கட்டப்பட்டது என சொல்கிறது.  இங்கு அருமையான சிற்ப கலைகளையும் சுவர் ஓவியங்களையும் காணலாம். பார்த்து ரசிக்க வேண்டிய அருமையான இடம்.


ராமாயண காலத்தில் ஜடாயு இறக்கும் தருணத்தில் ராமர் அனுமானுடன் சேர்ந்து மோக்ஷம் வேண்டிய ஜடாயுவை சந்தித்து " லே பக்ஷி" என சொல்ல சொல்கிறார். தெலுங்கில் 'லே பக்ஷி" என்றால் "எழிந்திரு பறவை" என்று பொருளாம். இந்த நிகழிச்சி இந்த ஊரில் நடந்ததாக சொல்லப்படுகிறது.. அதனால் இந்த ஊருக்கு பெயர் லே பக்ஷி என் வந்ததாக இன்னொரு ஸ்தல புராணம் சொல்கிறது.


ஆமை வடிவத்திலுள்ள ஒரு மலையில் தான் இந்த கோவில்கள் வடிவமைக்கபட்டுள்ளது . ஸ்கந்தபுராணத்தில் லே பக்ஷியிலுள்ள சிவன் கோவிலை முக்கியமான சிவன் கோவில்களில் ஒன்றாக குறிப்பிடபட்டுள்ளது

இந்த கோவிலுள்ள நந்தி 4 மீட்டர் உயரமும் 8 மீட்டர் நீளமும் கொண்ட ஒன்று. இந்தியாவிலுள்ள மிக பெரிய நந்திக்களில் இதுவும் ஒன்று . இங்கு துர்கா பாதம் பாறையில் உள்ளது. ஒரே கல்லில் செதுக்கபட்டுள்ள மிக பெரிய நாகர் ,விநாயகர் சிலைகள் பார்க்க மிகவும் அழககாக உள்ளது. பாறையிலயே சங்கிலி கண்ணிகளை அருமையாக செதுக்கியுள்ளார்கள். தொங்கும் தூண், கல்யாண மண்டபம், இவற்றில் எல்லாம் சிற்ப கலைகள் அருமையாக செதுக்கபட்டுள்ளன,

ராமாயண மாகாபாரத கதைகளை ஓவியங்களாகவும் சித்திரங்களாகவும் இங்கு காணலாம். அர்த்தமண்டப கூரையில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் மிகவும் அருமையானவை. சிவ பெருமானின் 14 அவதாரங்களையும் இங்கு காணலாம். இந்த கோவிலுள்ள அனைத்து தூண்களிலும் சுவர்களிலும் கூரைகளிலும் ஒரு இஞ்சு இடம் விடாமல் சிற்பங்களை செதுக்கியும் ஓவியங்களை வரைந்தும் வைத்துள்ளார்கள்.

இந்த கோவிலுள்ள இன்னொரு அதிசயம் தொங்கும் தூண். தரையில் பதியாமல் வேறு எந்த வித தாங்கும் இல்லாமல் நிற்கும் தூண் ஒன்று இங்கு உள்ளது. வழிகாட்டி சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணிகளிடம் ஒரு சிறு சுள்ளி எடுத்து தூணின் கீழே பின்புறமாக எடுத்து மேல்புறமாக வெளியே எடுத்து காட்டுகிறார் .இதை வெளிநாட்டு பயணிகள் வியந்து பார்த்து ரசிக்கிறார்கள். 

கருத்துகள் இல்லை: