திங்கள், 21 டிசம்பர், 2015

மடப்புரம் காளியம்மன் கோவில்


அருள்மிகு பத்ரகாளியம்மன் கோவில் சிவகங்கை  மாவட்டத்திலுள்ள மடப்புரம் என்ற ஊரிலுள்ளது. இது ஆயிரம் ஆண்டுகள் பழமையுள்ள சக்திவாய்ந்த கோவில். திருபுவனம் அருகிலுள்ளது இந்த கோவில். இங்குள்ள பத்ரகாளியம்மன் அக்கினியை கிரீடமாக கொண்டு காட்சியளிக்கிறாள். அதனால் அம்மனை குளிர்விக்க எலுமிச்சபழ மாலை அம்மனக்கு இந்த கோவிலில் சார்த்துவது வழக்கம். இன்னொரு சிறப்பு அம்மனக்கு நிழல் தரும் வகையில் மிக பிரம்மாண்டம்மான குதிரை வாகனம் அம்மனின் தலைக்கு மேல்புறம் அமைந்துள்ளது. அம்மனும் குதிரையும் திறந்த வெளியிலயே இருக்கிறது. பாடல் பெற்ற ஸ்தலமான திருபூவநாதர் கோவிலின் அருகில் உள்ளது இந்த கோவில்.

பிரளய காலத்தில் மதுரை முற்றிலும் அழிந்த போது மீனாக்ஷி அம்மன் சிவ பெருமானிடம் மதுரையின் எல்லையை வகுக்க கோரியபோது சிவ பெருமான் தான் கழுத்திலுள்ள ஆதிஷேஷனை எடுத்து மதுரையை வளைத்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது வடக்கே திருமாலிருஞ்சோலையும், தெற்கே திருபரங்குன்றமும் மேற்கே திருவேடகமும் கிழ்க்கே மடபுரத்தில் ஆதிஷேஷனின் தலையும் வாலையும் இணைத்து எல்லையை காட்டினதாக சொல்லப்படுகிறது. ஆதிஷேசனின் விஷ்த்தை உண்டு அம்மன் காளியாக இங்கு எழுந்தருளியிருப்பதாக நம்பபடுகிறது. இங்குள்ள விநாயகர் வினை தீர்க்கும் விநாயகராகவும் அய்யனார் காவல் தெய்வமாகவும் விளங்குகிறார்.

வழக்கு விசாரணைகள், கோர்ட் விவகாரங்கள் இவைகளுக்கு மடப்புரம் காளியம்மனை வணங்கினால் உடனே கைமேல் பலன் கிடைக்கும் என பக்தர்கள் நம்புகிறார்கள்.


இந்த கோவில் மதுரையிலிருந்து சுமார் 21 கி. மீ தொலைவில் உள்ளது. 

கருத்துகள் இல்லை: