திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது தென்காசி.தென்காசி என்பது தக்ஷின காசி என்று பெயர் பெற்ற ஸ்தலம்.வடக்கே வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் போல தெற்க்கே உள்ளது தென்காசியில் உள்ள இந்த காசி விஸ்வநாதர் கோவில்.சுவாமியின் திருநாமம் காசி விஸ்வநாதர் ,அம்மன் உலகம்மை .பராகிரம பாண்டியரால் எழுப்பப்பட்ட ஆலயம்.சிவ பக்தரான மன்னர் காசியில் உள்ளது போலவே இங்கும் ஒரு கோவில்வேண்டும் என்று எண்ணி எழுபப்பிய கோவில் தான் இது.புத்திரபேறு இல்லாத குலசேகர பாண்டியனக்கு மகளாக அம்பிகை பிறக்கிறாள்.அதை பிற்காலத்தில் அறிந்த மன்னன் உலகநாயகியே தனக்கு மகளாக இருந்ததை எண்ணி அம்மனை உலகம்மை என்ற பெயரிலேயே அழைக்க அம்மனின் திருநாமம் உலகம்மை என்றே வழக்கில் வந்துவிட்டது என்று சொல்லப்படுகிறது.வடகாசியில் அம்மனின் திருப்பெயர் விசாலாக்ஷி என்பதாகும்.இந்த கோவிலின் புராதன ராஜகோபுரம் பழுதாகி 1990 ஆம் ஆண்டு மீண்டும் ராஜகோபுரம் எழுப்பப்பட்டது.கோபுரத்திற்கு வெளியில் காற்று ஒரு திசையிலும் கோபுரத்திற்கு உள்புறம் காற்று எதிர் திசையிலும் அடிக்கும் அதிசயத்தை இங்கு காணலாம்.ஆங்கிலத்தில் crosswind draft என்று கூறுவார்களே அந்த முறையில் கோபுரம் அமைந்துள்ளது.வெளி பிரகாரத்தில் கங்கை கிணறு உள்ளது.சுவாமிக்கு அபிஷேகம் செய்ய இந்த நீர் பயன்படுகிறது.விக்கிரகம் இல்லாமல் இரண்டு பீட சந்நதிகளையும் இந்த கோவிலில் காணலாம்.ஓன்று ஆலோசகர் சன்னதி.இந்த கோவில் எழுப்பப்பட்டபோது சிவனே அடியாராக வந்து ஆலோசனைகள் வழங்கியதாக வரலாறு.ஆலோகசகர் சன்னதியில் பீடம் மட்டும் உள்ளது.இன்னொன்று பராசக்தி பீடம்.அம்பாளே இந்த பீட வடிவில் இருப்பதாக ஐதீகம்.இந்த பீடத்தை தாரணி பீடம் என்று சொல்கிறார்கள்.வெள்ளி, 26 டிசம்பர், 2008
காசி விஸ்வநாதர் ஆலயம்-தென்காசி
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது தென்காசி.தென்காசி என்பது தக்ஷின காசி என்று பெயர் பெற்ற ஸ்தலம்.வடக்கே வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் போல தெற்க்கே உள்ளது தென்காசியில் உள்ள இந்த காசி விஸ்வநாதர் கோவில்.சுவாமியின் திருநாமம் காசி விஸ்வநாதர் ,அம்மன் உலகம்மை .பராகிரம பாண்டியரால் எழுப்பப்பட்ட ஆலயம்.சிவ பக்தரான மன்னர் காசியில் உள்ளது போலவே இங்கும் ஒரு கோவில்வேண்டும் என்று எண்ணி எழுபப்பிய கோவில் தான் இது.புத்திரபேறு இல்லாத குலசேகர பாண்டியனக்கு மகளாக அம்பிகை பிறக்கிறாள்.அதை பிற்காலத்தில் அறிந்த மன்னன் உலகநாயகியே தனக்கு மகளாக இருந்ததை எண்ணி அம்மனை உலகம்மை என்ற பெயரிலேயே அழைக்க அம்மனின் திருநாமம் உலகம்மை என்றே வழக்கில் வந்துவிட்டது என்று சொல்லப்படுகிறது.வடகாசியில் அம்மனின் திருப்பெயர் விசாலாக்ஷி என்பதாகும்.இந்த கோவிலின் புராதன ராஜகோபுரம் பழுதாகி 1990 ஆம் ஆண்டு மீண்டும் ராஜகோபுரம் எழுப்பப்பட்டது.கோபுரத்திற்கு வெளியில் காற்று ஒரு திசையிலும் கோபுரத்திற்கு உள்புறம் காற்று எதிர் திசையிலும் அடிக்கும் அதிசயத்தை இங்கு காணலாம்.ஆங்கிலத்தில் crosswind draft என்று கூறுவார்களே அந்த முறையில் கோபுரம் அமைந்துள்ளது.வெளி பிரகாரத்தில் கங்கை கிணறு உள்ளது.சுவாமிக்கு அபிஷேகம் செய்ய இந்த நீர் பயன்படுகிறது.விக்கிரகம் இல்லாமல் இரண்டு பீட சந்நதிகளையும் இந்த கோவிலில் காணலாம்.ஓன்று ஆலோசகர் சன்னதி.இந்த கோவில் எழுப்பப்பட்டபோது சிவனே அடியாராக வந்து ஆலோசனைகள் வழங்கியதாக வரலாறு.ஆலோகசகர் சன்னதியில் பீடம் மட்டும் உள்ளது.இன்னொன்று பராசக்தி பீடம்.அம்பாளே இந்த பீட வடிவில் இருப்பதாக ஐதீகம்.இந்த பீடத்தை தாரணி பீடம் என்று சொல்கிறார்கள்.
லேபிள்கள்:
காசி விஸ்வநாதர் ஆலயம்-தென்காசி
வியாழன், 25 டிசம்பர், 2008
ஹொரநாடு அன்னபூர்ணேஸ்வரி ஆலயம்.
ஹொரநாடு கர்நாடக மாநிலத்தின் சிக்க்மகலூர் மாவட்டத்தில் உள்ள ஊர்.இது மேற்கு மலை தொடர்ச்சியில் உள்ளது.சிச்கமகலூரில் இருந்து சுமார் 100 கி.மீ தொலைவில் அடர்ந்த காடு மற்றும் பள்ளத்தாக்கு சூழ உள்ள பகுதியில் உள்ளது.முடிகேரி ,கலாச வழியாக ஹொரநாடு சென்று அடைய வேண்டும்.தேயில தோட்டங்கள் ,காப்பி தோட்டங்கள் செல்லும் பாதை முழுவதும் உள்ளது.கலாசாவில் இருந்து ஹொரநாடு வரை உள்ள மலைப்பாதை மிகவும் மோசமாக உள்ளது.குண்டும் குழியுமாக உள்ளது.சாலை இப்பொழுது செப்பனிட்டு வருகிறார்கள்.இருந்தாலும் தற்காலிமாக செப்பனிடுவது போல தான் தோன்றுகிறது.இது போன்ற அருமையான ஒரு திருத்தலத்திற்கு செல்லும் பாதை மிகவும் சீக்கிரம் செப்பனிட்டால் நல்லது என்று தோன்றுகிறது.இது ஒரு புராதன ஆலயம்.இங்குள்ள அன்னபூர்ணேஸ்வரி அகத்தியரால் நிறுவப்பட்டது என்று சொல்லப்படுகிறது.ஆனால் தற்பொழுது இருக்கும் அம்மன் சிலை1973 இல் கோவில் புனருத்தாரணம் செய்த பொழுது பிரதிஷ்டை செய்யப்பட்டது.இப்பொழுது அம்மன் ஆதி சக்த்யமகா அன்னபூர்ணேஸ்வரி என்ற திருநாமத்தில் அறியபடுகிறாள்.அம்மன் நான்கு கைகளுடன் நின்ற கோலத்தில் உள்ளது.அன்னபூர்ணதேவியை இங்கு கையில் சங்கு சக்கிரத்துடன் காணலாம்.முழுவதும் தங்கத்தால் ஆன விக்கிரகம்.வரும் பக்தர்கள் அனைவருக்கும் மூன்று நேரமும் அன்னம் அளிக்கப்படுகிறது.அன்னபூர்ணேஸ்வரி அல்லவா,பக்தர்களை பசியுடன் அனுப்பவது இல்லை.கல்யாண சாப்பாடு போல இரண்டு மாடிகளில் மிக பெரிய ஹாலில் மிகவும் சுத்தமான முறையில் வரும் பக்தர்கள் அனைவருக்கும் பாயாசத்துடன் சாப்பாடு போடுகிறார்கள்.அது தான் இங்கு பிரசாதம்.அன்னம்,சாம்பார்,ரசம்,மோரு,கறி,பூந்தி மற்றும் பாயாசத்துடன் வரும் பக்தர்கள் அனைவருக்கும் சாப்பாடு அளிக்கிறார்கள்.மலை மேலே தங்கும் விடுதிகள் உள்ளது.பேரூந்து நிலையமும் உள்ளது.சிக்மகளூர் மற்றும் பெங்களூர் உள்பட கர்நாடகத்தின் பல பாகங்களில் இருந்து இங்கு வர பேரூந்துவசதியும் உள்ளது.காசியில் உள்ள அன்னபூர்ணேஸ்வரி அமர்ந்த கோலத்தில் உள்ளது.அதுவும் தங்கத்தால் ஆன விக்கிரகம் தான்.காசியில் உள்ள அன்னபூர்ணேஸ்வரி கையில் அன்ன கரண்டியுடன் காண படுவாள்.தினமும் அன்னபூர்ணேஸ்வரியை வணங்கினால் ஒருவனுக்கு வாழ்கையில் அன்னத்திற்கு திண்டாட்டம் வராது என்பது நம்பிக்கை.
லேபிள்கள்:
ஹொரநாடு அன்னபூர்ணேஸ்வரி ஆலயம்.
பேலூர் சென்னகேசவ ஆலயம்


பேலூர் கர்நாடகத்தின் ஹசன் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர்.இது ஒரு காலத்தில் ஹோய்சால மன்னர்களின் தலைநகரமாக விளங்கியது.இங்கு உள்ள சென்னகேசவ ஆலயம் மிகவும் கலை நயம் மிகுந்தது.ஹளபேடு போல இங்கும் அருமையான கலை சிற்பங்களை கண்டு களிக்கலாம்.ஹோய்சால பாணியில் அமைந்த கோவில் இது.ஆனால் முகப்பில் உள்ள ராஜகோபுரம் மட்டும் திராவிட பாணியில் உள்ளது.இதற்க்கு காரணம் இந்த கோபுரம் மட்டும் பிற்காலத்திலே விஜயநகர மன்னர்களால் எழுப்பப்பட்டது.சென்னகேசவ என்றால் கன்னடத்தில் அழகான விஷ்ணு என்று பொருள்.ஹோய்சால மன்னன் விஷ்ணுவர்த்தனால் எழுப்பப்பட்ட ஆலயம்.தலக்காட்டில் சோழ மன்னர்களை வென்ற பிறகு அந்த வெற்றியை கொண்டாட எழுப்பப்பட்ட ஆலயம் தான் இது.இது ஒரு 10 ஆம் நூற்றாண்டு ஆலயம்.இந்த ஆலயம் கட்டிமுடிக்க சுமார் 108 ஆண்டுகள் ஆனது என்று சொல்லப்படுகிறது.விஷ்னுவர்த்தனரின் பேரன் காலத்தில் தான் ஆலயம் முழுமை பெற்றது.ஹளபேடு போல இங்கும் சைவ வைணவ சிற்பங்களின் அழகை கண்டு களிக்கலாம்.மிகவும் நுட்பமான கலை வேலைப்பாடுகள்.ஹளபேடு ஆலயம் எழுப்ப 190 ஆண்டுகள் ஆயின என்று சொல்லப்படுகிறது.இருந்தும் அந்த ஆலயம் முழுமை பெறவில்லை.ஆனால் பேலூர் ஆலயம் முழுவதும் கட்டி முடிக்கப்பட்டது.சென்னகேசவர் தான் இங்கு மூலவர்.கம்பீரமாக நிற்கும் மூலவர் கண்ணை கவருகிறது.சௌமிய தேவி தாயார் சன்னதி உள்ளது.ஆண்டாள் சன்னதியும் உள்ளது.கோவில் உள்ளேயே புஷ்கரனியும் உள்ளது.பல இடங்களில் லக்ஷ்மி நரஸிம்ஹர் சிற்பங்களை அற்புதமாக பல அளவுகளில் கண்டு ரசிக்கலாம்.நாங்கள் சென்றிருந்த சமயம் பெருமாளுக்கு அர்ச்சனை நடந்து கொண்டிருந்தது.அந்த நேரத்திலே பக்தர்களுக்கு மிகவும் நன்றாக தெரிவதற்கு ஏதுவாக பெருமாள் மேல light focus செய்யப்படுகிறது.பார்ப்பதற்கு மிகவும் ரம்யமாக இருக்கிறது.
ரதம்,நாட்டிய நிலைகள் இவைகளெல்லாம் கூட மிகவும் அருமையாக சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.ஹசனில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ளது பேலூர்.பேலூர் செல்லும் பாதையில் உள்ளது ஹளபேடு.
செவ்வாய், 23 டிசம்பர், 2008
ஹளபேடு ஹோய்சாலேச்வர ஆலயம்
12 ஆம் நூற்றாண்டில் கர்நாடகத்தை ஆண்ட ஹோய்சால மன்னர்களின் தலைநகரமாக விளங்கியது தான் ஹளபேடு. ஹோய்சால மன்னர்கள் அருமையான கலை ரசிகர்கள்.அவர்களால் உருவாக்கப்பட்ட ஹோய்சலேச்வர ஆலயம்,கேதாரேச்வர ஆலயம்,பசாதி ஆலயம்(ஜெயின் ஆலயம் ) மற்றும் ரெங்கநாதர் ஆலயம் இதற்க்கு சான்றாக விளங்குகிறது.உண்மையிலேயே இது போன்ற நுட்பமான நுண்ணிய சில்ப கலை சிறப்புகளை இந்தியாவில் வேறு எங்கும் காண இயலாது.ஹோய்சால மன்னர்களால் அமைக்கப்பட்ட பேலூர்,ஹளபேடு ஆலயங்களே அதற்க்கு சாட்சி. இன்னொரு முக்கியமான விடயம் ஹோய்சால மன்னர்கள் உண்மையிலேயே மத சார்பற்ற ஆட்சி நடத்தி இருக்கிறார்கள் என்பதற்கு இந்த ஆலயங்களே சாட்சி. சைவ,வைணவ மற்றும் ஜெயின் ஆலயங்களை அவர்கள் எந்த வித பாகுபாடுகளும் இல்லாமல் உருவாக்கி இருக்கிறார்கள்.இன்னும் சொல்லபோனால் சைவ ஆலயங்களில் அருமையான வைணவ கடவுள் சிலைகள் வடிக்கபட்டிருக்கிறது. அதே போல சைவ ஆலயங்களில் வைணவ சிலைகளையும் காணலாம்.அருமையான மிக பெரிய இரண்டு நந்தி சிலைகளும் கணேசர் சிலையும் கண்ணை கவருகிறது.நந்தி சிலைகளில் காணப்படும் வேலைபாடுகள் வேறு எங்கும் காணகிடைககாதவை.இங்கு ஆலயத்தை சுற்றி உள்ள சுவர்களில் வடிக்கப்பட்டுள்ள சிலைகள் பல வடிவங்களில் காணலாம்.மிகவும் சிறிய நுண்ணிய வேலைபாடுகள் நிறைந்த சிலைகள் ,நடுத்தர மற்றும் பெரிய அளவிலான சிலைகள் ஆகியவைகளை காணலாம்.முக்கியமான விடயம் என்னவென்றால் எல்லா சிலைகளும் இன்றும் உயிரோவியமாக திகழ்வது தான்.மிக சிறிய சிலைகள் சிலது பழுது ஆகி இருக்கிறது.இருந்தாலும் அவைகளின் அழகை காண கண் கோடி வேண்டும்.சிவ தர்பார்,பாலகிருஷ்ண லீலைகள்,அர்சுனனுக்கும் கர்ணனுக்கும் நடந்த போர், கிருஷ்ணர் கோவர்த்தனகிரியை தூக்குவது,கஜேந்திர மோக்ஷம்,மத்ஸ்ய யந்திரம்,ராமரும் வானர சேனையும்,கிருஷ்ணரும் அர்ச்சுனரும் ரதத்தில் இருந்து இறங்குவது,ராவணன் கைலாச பர்வதத்தை தூக்குவது போன்றவைகளும் அருமையான சிலைகளாக வடிக்க பட்டுள்ளது.இரண்டு நந்திகளுக்கு எதிரில் இரு மிக பெரிய சிவ லிங்கங்கள் மூலவராக உள்ளது.இதற்க்கு இங்கு இன்றும் பூஜைகள் செய்யப்படுகிறது.ஆனால் ஒரு நெருடலான விடயம் வழக்கமாக சிவாலயங்களில் காணப்படும் அம்மன் சன்னதி இங்கு இல்லாதது தான்.கண்டிப்பாக அனைவரும் வாழ்க்கையில் ஒரு முறையாக பார்க்க வேண்டிய இடம் இது.ஆலயத்திற்கு வெளியில் அருமையான் புலவெளியும் தோட்டமும் ஒரு குளமும் உள்ளது.ஊருக்குள் இருக்கும் ரெங்கநாதர் ஆலயத்திற்கு சென்றபொழுது ஏனோ அந்த ஆலயம் மூடப்பட்டிருந்தது.சுற்றிலும் புதர்கள் நிறைந்திருந்தது.அதனால் பார்க்க இயலவில்லை. ஹசனில் இருந்து பேலூர் செல்லும் பாதையில் உள்ளது ஹளபேடு.கோமதேஸ்வரர் ஆலயம் -சரவனபேலகோல
கோமதேஸ்வரர் ஒரு ஜெயின் துறவி. இந்தியாவில் உள்ள மிக முக்கியமான ஜெயின் ஆலயங்களில் கர்நாடகாவின் ஹசன் மாவட்டத்தில் உள்ள ச்ர்வனபேலகொலாவில் உள்ள கொமேதஸ்வரர் ஆலயமும் ஓன்று. சுமார் 60 அடி உயரத்தில் உள்ள கோமதேஸ்வரர் சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிலை.இது போன்ற சிலைகளில் உலகிலேயே இது தான் மிகவும் உயரமானது என்று கூறப்படுகிறது.ஹோய்சால மன்னர்களால் அன்றைய கர்நாடகாவில் பல ஹிந்து,மற்றும் ஜெயின் ஆலயங்கள் எழுப்ப பட்டன.அவற்றில் முக்கியமான ஜெயின் ஆலயம் தான் இது. இந்த ஆலயம் தற்பொழுது வழிபாட்டில் இருந்தாலும் ஒரு சுற்றுலா ஸ்தலம் போல பிற மதத்தினரும் அதிக அளவில் வருகிறார்கள்.ஜெயின் துறவிகளை தீர்த்தங்கரர் என்று அழைக்கிறார்கள்.ஜெயின் துறவிகளின் சிலைகள் பொதுவாக நிர்வாணமாக தான் இருக்கும்.கோமதேஸ்வரரின் சிலையும் அந்த வகையிலேயே உள்ளது.மிகவும் உயரமான ஒரு மலையின் மேல் தான் இந்த ஆலயம் உள்ளது.சுமார் 700 படிகள் செங்குத்தாக ஏறி இந்த ஆலயத்திற்கு செல்ல வேண்டும்.மலை உச்சியில் கம்பீரமாக கோமதேஸ்வரர் சிலை நிற்கிறது.கோமதேஸ்வரர் சிலைக்கு மேலே கூரை இல்லை.திறந்த வெளியிலேயே இருக்கிறது.ஆனால் சுற்றிலும் ஆலயம் உள்ளது.இது ஒரு 10 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஆலயம்.குன்றின் மேல் இருந்து பார்த்தால் மிகவும் ரம்ம்யமாக இருக்கிறது.அருமையான ஹோய்சால கால சிற்ப கலைகளையும் இங்கு கண்டு களிக்கலாம்.கோமதேஸ்வரருக்கு மற்றொரு பெயர் பஹுபாலி.24 ஜெயின் தீர்த்தங்கரர்கள் இருந்ததாக கூறப்படுகிறது.அதில் முதல் தீர்த்தங்கரரின் புதல்வர் தான் பஹுபாலி.12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இங்கு பஹுபாலிக்கு மகாஅபிஷேகம் நடைபெறும்.ஜெயினர்களுக்கு அது ஒரு மிக பெரிய விழா ஆகும்
லேபிள்கள்:
கோமதேஸ்வரர் ஆலயம் -சரவனபேலகோல
ஞாயிறு, 21 டிசம்பர், 2008
கொல்லூர் மூகாம்பிகை ஆலயம்
மங்களூரில் இருந்து 128 கி.மீ தொலைவில் உள்ளது கொல்லூர் மூகாம்பிகா ஆலயம். சிவனும் சக்தியும் இணைந்த ஜோதிர் லிங்க ஸ்தலம் இது.ஆதி சங்கரரால் அமைக்கப்பட்ட ஸ்ரீ சக்ரத்தின் மேல் தான் மூகாம்பிகா அம்மனின் பஞ்சலோக விக்கிரகம் அமைந்துள்ளது.இந்த ஆலயத்தில் ஒரு பஞ்சமுக விநாயகரும் உள்ளார். சௌபர்ணிகா நதி கரையில் அமைந்துள்ளது இந்த ஆலயம்.சப்தரிஷிகள் கவுமாசுரன் என்ற அசுரனை அழிக்க யாகம் செய்யும் பொழுது சுக்ராசார்யார் வரபோகும் ஆபத்தை அவனுக்கு உணர வைக்கிரார். அந்த அசுரன் உடனே சிவ பூஜை செய்கிறான். அவன் முன் தரிசனம் தந்த சிவ பெருமான் 'என்ன வரம் வேண்டும் என்று கேட்கிறார்'.அசுரன் கேட்க்கும் வரத்தால் வர இருக்கும் ஆபத்தை உணர்ந்து வாகதேவி அவனை உமை ஆக மாற்றுகிறாள். அன்று முதல் பேச முடியாத கவுமாசுரன் மூகாசுரனாக அறியபடுகிறான்.பின்பு கோல ரிஷியின் வேண்டுதலுக்கு இணங்கி அம்மனின் சக்தியால் மூகாசுரன் அழிக்க படுகிறான்.மூகாசுரன் அழிக்க பட்ட அந்த இடத்தில் தான் அன்னை மூகாம்பிகை ஆலயம் அமைந்துள்ளது.லக்ஷ்மி,பார்வதி மற்றும் சரஸ்வதி மூன்றும் சேர்ந்த ஒரு சக்தி தான் மூகாம்பிகை அம்மன்.இங்கு அன்னை இருப்பதை அறிந்து ஆதி சங்கரரால் ஸ்ரீ சக்கரத்தில் மூகாம்பிகை அம்மன் பிரதிஷ்டை செய்யபடப்பட்டது .பரசுராமரால் கர்நாடகத்தில் உருவாக்கப்பட்ட ஏழு முக்தி ஸ்தலங்களில் கொல்லூர் மூகாம்பிகை ஆலயமும் ஓன்று. இங்கு மூகாம்பிகை அம்மன் பத்மாசன தோற்றத்தில் காட்சி தருவது இன்னொரு விசேஷம்வியாழன், 18 டிசம்பர், 2008
உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா ஆலயம்
மங்களூரில் இருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் உடுப்பி உள்ளது. இங்கு உள்ள ஸ்ரீ கிருஷ்ணா ஆலயம் மிகவும் பிரபலம்.மதவச்சர்யரின் மடத்தில் தான் இந்த ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயம் உள்ளது.ஸ்தல புராணம்
துவரகாவில் முழுவதும் சந்தனத்தால் மறைக்கப்பட்ட ஸ்ரீ கிருஷ்ணர் சிலையை ஒரு மாலுமி தவறுதலாக சந்தன கட்டை என்று கருதி கப்பலின் சமநிலைக்கு பயனபடுத்தும் பெரிய எடைக்கு பயன்படும் என்று கருதி எடுத்து செல்கிறார்.மாலபே அருகே கப்பல் கரையை கடக்கும் பொழுது ஒரு பெரும் புயலில் சிக்குகிறது.அந்த நேரத்தில் தியானத்தில் இருந்த மத்வாச்சர்யரின் ஞான திருஷ்டியால் இந்த விஷயம் தெரிந்த உடனே அவர் தனது சக்தியால் புயலின் சீற்றத்தை குறைத்து கப்பலை பாதுகாப்பாக கரை சேர்க்கிறார்.அந்த மாலுமி உடனே நன்றி கடனாக கப்பலில் இருக்கும் பொருள்களில் என்ன வேண்டுமோ கேளுங்கள் என்று கூறுகிறார். மத்வசார்யர் சந்தனகட்டையை கேட்கிறார். அந்த சந்தன கட்டையை மடத்துக்கு கொண்டு வந்து சுத்தப்படுத்தி ஸ்ரீ கிருஷ்ணர் சிலையை மடத்தில் நிறுவுகிறார்.16 ஆம் நூற்றாண்டில் ஸ்ரீ கிருஷ்ணரின் தீவிர பக்தர் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த கனகதாசரக்கு ஆலய பிரவேசம் நிராகரிக்கபடுகிறது. இருந்தும் கவலைப்படாமல் அவர் ஆலய வாசலில் நின்று தியானம் செய்தபடியே இருக்கிறார்.ஸ்ரீ கிருஷ்ணர் தனது தீவிர பக்தருக்காக அப்படியே திரும்பி சுவற்றில் ஒரு சிறு துவாரம் உருவாக்கி அதன் மூலம் தனது பக்தருக்கு காட்சி அளிக்கிறார்.அன்று முதல் இன்று வரை ஸ்ரீ கிருஷ்ணரை அந்த திரும்பிய நிலையில் ஜன்னல் துவாரம் வழியாகவே பக்தர்கள் தரிசிக்கிறார்கள்.அந்த ஜன்னலை கனகனகிந்தி என்று கன்னடத்தில் சொல்கிறார்கள்.
ஆநேகுட்டே ஸித்தி விநாயகர் ஆலயம்
உடுப்பி மாவட்டத்தில் குந்தாபுரா என்ற ஊருக்கு மிக அருகில் உள்ள ஊர் தான் ஆநேகுட்டே.இங்கு உள்ள சித்தி விநாயகர் ஆலயம் மிகவும் பிரசித்தம். பிள்ளையார்பட்டி,காணிப்பாக்கம்,ஈச்சனாரி,மணக்குள விநாயகர் போன்ற தனி விநாயகர் ஆலயம் இது.மங்களூரில் இருந்து 90 கி.மீ தொலைவிலும் ,உடுப்பியில் இருந்து 30 கி.மீ தொலைவிலும் ,குந்தாபுராவில் இருந்து 3 கி.மீ தொலைவிலும் இந்த கோவில் உள்ளது. இந்த ஊருக்கு கும்பாசி என்று மற்றொரு பெயரும் உண்டு.
முன்னொரு காலத்தில் இந்த ஊர் வறட்சியின் பிடியில் இருந்த பொழுது அகத்தியர் மழை வேண்டி இங்கு யாகம் செய்கிறார்.அப்பொழுது கும்பாசுரன் அந்த யாகத்திற்கு விக்கினம் ஏற்படுத்த முனைகிறான். அப்பொழுது ஸித்தி விநாயகர் பாண்டவர்களில் ஒருவரான பீமருக்கு ஒரு வாள் அளிக்கிறார். அந்த வாளினால் பீமர் குபாசுரனை சம்ஹாரம் செய்கிறார். அதனால் இந்த ஊருக்கு கும்பாசி என்று ஒரு பெயரும் உண்டு.இங்கு விநாயகரை வெள்ளி கவ்ச அலங்காரத்தில் தரிசிக்கலாம்.நான்கு கரங்குளுடைய விநாயகரின் இரண்டு கரங்கள் வரம் அருளும் ஹஸ்த கரங்கள்.மாற்ற இரண்டு கரங்கள் கீழ் நோக்கி பக்தர்களுக்கு அபயம் அளிக்கும் கரங்கள். கர்நாடகத்தில் உள்ள ஏழு முக்தி ஸ்தலங்களில் இதுவும்ஓன்று. உடுப்பி கொல்லூர் சுப்ரமண்யா சுப்ரமண்யா
சங்கரநாராயணா கோகரணம் ஆகியவை மற்றவை ஆகும்
சங்கரநாராயணா கோகரணம் ஆகியவை மற்றவை ஆகும்
லேபிள்கள்:
ஆநேகுட்டே ஸித்தி விநாயகர் ஆலயம்
திங்கள், 15 டிசம்பர், 2008
விருபாக்ஷ சுவாமி திருகோவில்
ஹம்பி மற்றும் விஜயநகர சாம்ராஜ்ய புராதன கலாசார சின்னங்களை பற்றி தனியாகவும் விரிவாகவும் எழுத உள்ளேன்.அனால் இந்த பதிவில் விருபாக்ஷ சுவாமி ஆலயத்தை பற்றி மட்டுமே கூறியுள்ளேன்.அதற்க்கு ஒரு காரணமும் உண்டு.பரந்து விரிந்து கிடக்கும் விஜயநகர சாம்ராஜ்ய அழிவுகளில் அழிந்த நிலையில், எந்த வித தெய்வ வழிபாடும் இல்லாமல்,வெறும் சுற்றுலா ஸ்தலமாக பல ஆலயங்கள் இருக்கும் இடத்தில் இன்றும் ஓங்கி உயர்ந்து கம்பீரமாக மக்கள் தினசரி வழிபடும் ஆலயமாக திகழ்வது இந்த விருபாக்ஷ சுவாமி ஆலயம் மட்டுமே.ஹம்பியில் துங்கபத்ரா நதி கரையில் உள்ளது இந்த சிவாலயம்.விருபாக்ஷச்வாமி என்பது சுவாமியின் திருநாமம்.அம்மனின் திருநாமம் பம்பாதேவி. இங்கும் இறைவனுக்கும் இறைவிக்கும் திருமணம் நடந்ததாக சொல்லப்படுகிறது.துங்கபத்ரா நதிக்கு இன்னொரு பெயர் பம்பா நதி. அதனாலயே இறைவனுக்கு இங்கு பம்பாபதி என்றும் ஒரு பெயர் உண்டு.ஆலயத்திற்கு நடுவிலும் பூமிக்கு அடியில் துங்கபத்ராவின் ஒரு சிறு பகுதி ஓடுகிறதாக சொல்லப்படுகிறது.விஜயநகர அரசர்களின் குலதெய்வம் விருபாக்ஷச்வாமி .விஜயநகர சாம்ராஜ்யத்திற்கு ஆரம்பத்தில் விருபாக்ஷா நகர சாம்ராஜ்யம் என்று ஒரு பெயர் இருந்ததாக கூற படுகிறது.அற்புதமான வேலைப்பாடுகள் நிறைந்த ஆலயம்.விஜய நகர சாம்ராஜ்ய சிற்ப கலையின் நுட்பத்தை இங்கு கண்டு களிக்கலாம். தத்ரூபமாக கல்லிலேயே பெரிய கொப்பரை ஓன்று உள்ளது.அதே போல் சுவாமி சன்னதிக்கு முன் கல்லிலேயே பெரிய விபூதி மறை செதுக்கி உள்ளார்கள்.மிகவும் அற்புதமாக உள்ளது. இந்த ஆலயத்தில் ஒரு அபூர்வ மூன்று தலை நந்தி உள்ளது.மூல ஸ்தானத்திற்கு முன் உள்ள நடு மண்டபம் கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்டது. இரு அம்மன் சன்னதிகள் உள்ளது.பம்பா தேவி மற்றும் புவநேஸ்வரிதேவி .சிவன் சன்னதிக்கு பின் புறம் உள்ள படிக்கட்டுகளில் ஏறி வலது புறம் பார்த்தால் ஒரு சிறு துவாரம் வழியாக கிழக்கு புறம் உள்ள பிரதான கோபுரம் தெரியும்.அதற்க்கு நேர் எதிர் புறம் திரும்பி சுவற்றில் பார்த்தால் கோவில் கோபுர நிழல் தலை கீழாக தெரியும்.இது ஒரு விந்தையான விடயம்.சுற்றிலும் பல சமகால ஆலயங்கள் முற்றிலும் அழிந்த நிலையில் இருக்க இந்த சிவாலயம் மட்டும் வழிபாட்டு ஸ்தலமாக இன்றும் திகழ்வதும் ஒரு ஆச்சர்யமே.
லேபிள்கள்:
விருபாக்ஷ சுவாமி திருகோவில்,
ஹம்பி
வியாழன், 11 டிசம்பர், 2008
நவபிரிந்தாவனம்
கர்நாடக மாநிலத்தில் ஹோஸ்பெட் அருகில் உள்ள இடம் தான் அநேகொந்தி. இங்கு தான் நவபிரிந்தாவனம் ஆலயம் உள்ளது.ஸ்ரீ ராகவேந்தரின் ஒன்பது மாதவ ஆசார்ய குருமார்களின் சமாதி இங்கு அமைந்து உள்ளது.இது மிகவும் புனிதமானதும் சக்தி வாய்ந்ததுமான ஸ்தலமாக கருதப்படுகின்றது. இந்த ஒன்பது சமாதிகளில் அந்த மகான்கள் இன்றும் வாழ்ந்து கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள்.திரு ஏ.எம்.ஆர் அவர்கள் குமுதம் ஜோதிடம் இதழில் இந்த இடத்தின் மகாமத்யத்தை பற்றி பல முறை விளக்கி எழுதி உள்ளார்கள்.பக்தர்களும் அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் அவர்களின் வாழ்கையில் நடந்த அதிசயங்களையும் குமுதம் ஜோதிடம் மூலம் வாசகர்களுடன் பகிர்ந்திருக்கிறார்கள்.இந்த இடத்தின் மற்றொரு சிறப்பு இந்த இடம் தான் ராமாயணத்தில் சொல்லப்படும் கிஷ்கிந்தா.சுக்ரீவரும் அவரது வானர சேனையும் இங்கு தான் இருந்ததாக சொல்லப்படுகிறது.நவபிரிந்தாவனம் அமைந்து இருக்கும் இடம் ஒரு தீவு.ஒரு புறம் துங்கா நதி ஓடுகிறது.மறுபுறம் பத்ரா நதி ஓடுகிறது.இரண்டும் சங்கமித்து துங்கபத்ரா நதியாக மாறும் இடத்தில் ஒரு பாறையின் மேல் உள்ளது நவபிரிந்தாவனம்.அநேகொந்தியில் இருந்து மோட்டார் படகு மூலம் தான் இந்த இடத்தை சென்று அடைய முடியும்.சீதையை தேடி புறப்பட்ட ராமரும் லக்ஷ்மணரும் இந்த பாறையின் மேல் தங்கி இருந்ததாக வரலாறு.மேலும் இந்த இடத்தில் தான் ராமர் ஆஞ்சநேயரை சந்திக்கிறார்.அந்த இடத்தில் தான் ஒன்பது மகான்களின் சமாதி அமைந்துள்ளது.நவபிரிந்தாவனத்தில் ஒன்பது சமாதி போக ஆஞ்சநேயர் மற்றும் ரங்கனாதருக்கும் சிறு சன்னதிகள் உள்ளது.இந்த ஒன்பது மகான்களில் முதல் ஆசார்யர் ஸ்ரீ பத்மநாபா தீர்த்தர்.இவர் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.இவர் தான் மத்வசார்யரின் முதல் சீடர்.உலகின் முதல் ஜீவா சமாதி இவருடையது தான்.பல கால கட்டத்தில் வாழ்ந்த ஒன்பது மகான்களின் சமாதிகள் இங்குள்ளது.அந்த ஒன்பது மகான்கள்1.ஸ்ரீ பத்மநாபா தீர்த்தர்
2.ஸ்ரீ ரகுவர்யா தீர்த்தர்
3.ஸ்ரீ கவீந்த்ரா தீர்த்தர்
4.ஸ்ரீ வாகீச தீர்த்தர்
5.ஸ்ரீ வ்யாசராஜா தீர்த்தர்
6.ஸ்ரீ ஸ்ரீனிவாச தீர்த்தர்
7.ஸ்ரீ ராம தீர்த்தர்
8.ஸ்ரீ சுதீந்திர தீர்த்தர்
9.ஸ்ரீ கோவிந்த ஒடெயர்
நவப்பிரிந்தாவனம் தியான ஸ்லோகம்
பத்மநாபம் கவீந்திரம் ச வாசீகம்
வ்யாசராஜகம் ஸ்ரீநிவாசம் ராமதீர்த்தம்
ததைவச் ஸ்ரீ சுதீந்திரம் ச கோவிந்தம்
நவபிரிந்தாவனம் பஜே
பஞ்சமுகி
மந்திராலயத்தில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ள இடம் தான் எம்மிகநூர். இங்கு தான் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.இந்த இடத்தை பஞ்சமுகி என்றும் அழைக்கிறார்கள். இந்த இடத்திற்கு செல்லும் சாலை இறுதியில் சுமார் 5 கி.மீ மிகவும் குறுகலான மோசமான சாலையாக உள்ளது. ஒரு பெரிய பாறையின் மேல் அமைந்து உள்ள குன்றில் தான் இந்த ஆலயம் உள்ளது.குகை வடிவில் உள்ள இந்த இடத்தில் ஸ்ரீ ராகவேந்திரர் 12 ஆண்டு காலம் தவம் இருந்திருக்கிறார்.இந்த இடத்திலும் இதன் சுற்று வட்டாரத்திலும் பல வித வடிவங்களில் பெரிய பாறைகள் நிறைந்திருக்கிறது.Boulders என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அந்த வித பாறைகள். இந்த வடிவங்கள் இயற்கையாக அமைந்தவை.விமான வடிவ பாறை,மெத்தை தலையனை வடிவ பாறை போன்றவைகளும் இங்கு உள்ளது. இங்கு பாறை மேல் உள்ள ஆஞ்சநேயர் சுயம்புவாக வந்தது .ஐந்து தலை மற்றும் பத்து கைகளுடன் அமைந்துள்ளது. ஸ்ரீ ராகவேந்தரின் தவத்தை அடுத்து , திருப்பதி வேங்கடவர்,மகாலக்ஷ்மி,பஞ்சமுகி ப்ரானதேவரு மற்றும் கூர்மாவதாரர் ராகவேந்திர சுவாமிகளுக்கு காட்சி அளித்ததாக வரலாறு.அதற்க்கு பின்பு தான் சுவாமிகள் மந்திராலயம் சென்று ஜீவ சமாதி அடைகிறார்கள்.ஹனுமான்,கருடர்,நரசிம்ஹர்,வராஹர் மற்றும் ஹயக்ரீவர் தான் இந்த ஐந்து முகங்கள்.கிழக்கு நோக்கி இருப்பது அனுமன் முகம்,தெற்கு நோக்கி இருப்பது நரசிம்ஹர்,மேற்கு நோக்கி இருப்பது கருடர்,வடக்கு நோக்கி இருப்பது வராஹர் .உச்சியில் இருப்பது ஹயக்ரீவர்.ஐந்து வகையில் இறை வழிபாடு செய்யலாம். இறைவன் நாமாவளி சொல்வது,இறைவனை ஸ்மரித்து கொண்டே இருப்பது,இறைவனை கீர்த்தனைகள் மூலம் பாடி துதிப்பது,இறைவனிடம் யாசிப்பது கடைசியில் இறைவனிடம் சரணாகதி அடைவது.பஞ்சமுகத்தில் உள்ள ஐந்து முகங்களும் இந்த ஐந்து நிலைகளை தான் குறிக்கிறது.
மந்திராலயம்

கடந்த சில தினங்களில் மந்திராலயம்,பஞ்சமுகி ,நவபிரிந்தாவனம்,ஹம்பி,ஆநேகுட்டி,உடுப்பி மற்றும் கொல்லூர் சென்று வந்தேன்.இந்த பயண விபரங்களை விரிவாக பல பகுதிகளாக இணையதள நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்றுள்ளேன்.தமிழில் இந்த ஆலய தரிசன வலைப்பதிவினை கடந்த சூலை மாதம் தான் தொடங்கினேன்.அதற்க்கு முன்பு நான் சென்று வந்த பல ஆலயங்களை பற்றியும் எழுத எண்ணி இருந்தேன். ஆனால் அதற்குள்ளாக இந்த பயணம் செல்ல வேண்டி வந்தது.அதனால் முதலில் சமீபத்தில் சென்று வந்த விபரங்களை வலைபதிவில் பகிர்ந்த பின்பு மற்றவை குறித்து எழுதலாம் என்றுள்ளேன்.ஆந்திராவில் உள்ள கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் எம்மிகநூர்.இது துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்துள்ளது.அங்கு தான் ஸ்ரீ குரு ராகவேந்திரா மந்திராலயம் அமைந்துள்ளது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீ ராகவேந்திரர் இங்கு ஜீவ சமாதி அடைந்து பிரிந்தாவனத்தில் பிரவேசித்தார்.அவர் இன்றும் தனது யோக சமாதியில் இருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து கொண்டிருக்கிறார். கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இருந்தும் ராய்ச்சூர் செல்லும் பாதை வழியாகவும் மந்திராலயம் வந்து சேரலாம்.இங்கு ராகவேந்திரர் தவிர வாதீந்திர தீர்த்தருக்கும் பிரிந்தாவனம் உள்ளது.ராகவேந்தரரின் பிரிந்தாவனதிற்க்கு செல்லும் முன் வலது புறம் மஞ்சலம்மா சன்னதி உள்ளது. இங்கு வழிபட்ட பின்பு தான் ராகவேந்தரரின் பிரிந்தாவன தரிசனத்திற்கு செல்ல வேண்டும். பிரிந்தாவனத்தின் எதிர்புறம் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது.பூர்வாச்ரமத்தில் அவரது இயற் பெயர் வேங்கடநாதர் .அவரது குரு சுதீந்திர தீர்த்தர் அவரை பீட பொறுப்பை ஏற்குமாறு பணித்த போது மரியாதையுடன் மறுத்து விடுகிறார்.தனக்கு குடும்பம்,மனைவி,மற்றும் மகன் உள்ளதால் ஏற்க முடியாது என்று கூறி விடுகிறார்.ஆனால் தெய்வ செயல் வேறு விதமாக இருக்கவும் இறுதியில் குடும்பத்தை துறந்து சன்யாசம் மேற்கொள்கிறார்.பல அதிசயங்களை நிகழ்த்தி உள்ளார்.இறந்தவருக்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளார்,தீராத வியாதிகளை குணப்படுத்தி உள்ளார்.சித்தி மசூத் கான் என்ற நவாப் வேண்டும் என்றே பழம் மற்றும் இனிப்புகளுடன் மாமிசத்தையும் மைத்து சுவாமிகளிடம் கொடுத்துள்ளார்.ராகவேந்திரர் தனது சக்தியால் அவற்றை பழங்கள் மற்றும் முந்திரி பருப்புகளாக மாற்றி நவாபை திகைக்க வைத்தார்.உடனே சுவாமிகளிடம் மன்னிப்பு கோரிவிட்டு விளைநிலத்தை மடத்திற்கு தானமாக அளிக்கிறார்.ஆனால் சுவாமிகள் அதை மறுத்து விட்டு மடத்திற்கு மானியம் கோருகிறார்.இன்னொரு அதிசயம் சர் தாமஸ் மன்றோ சம்பந்தப்பட்டது.மானியங்களை திரும்ப பெறும் சட்டம் மூலம் மடத்துக்கு கொடுக்கப்பட்டிருந்த மானியம் முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டது.மந்திராலயம் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியாளரிடம் மசூத் கான் மடத்துக்கு தானமாக கொடுத்த நிலத்தை திரும்ப பெற கூடாது என்று கோரிக்கை எழுப்பினார்கள்.அந்த நேரம் பெல்லாரி மாவட்ட ஆட்சியாளராக இருந்த மன்றோ நேரில் சென்று விசாரிக்க எண்ணி மடத்துக்கு சென்றார்.மடத்துக்குள் நுழைந்த உடன் அவர் ஆங்கிலத்தில் யாருடனோ உரையாட ஆரம்பித்தார்.சுற்றி இருந்தவர்களுக்கு அவர் யாருடன் உரையாடினார் என்பது புரியவில்லை.மன்றோ நீங்கள் குறிப்பிடும் மகான் இவர் தானா என்று மட்டும் கேட்டு விட்டு சென்று விடுகிறார். பின்பு அவர் ஆளுநருக்கு மடத்துக்கு சட்டப்படி உரிமை உள்ள நிலம் அது என்று தகவல் அனுப்புகிறார்.அந்த தகவல் ஆளுநருக்கு சென்று அடையும் முன்பே ஆளுநர் இங்கிலாந்துக்கு விடுமுறையில் செல்கிறார்.மன்றோ தாற்காலிக ஆளுநராக பொறுப்பேற்கிறார். ஆளுநராக அவர் கையெழுத்திட்ட முதல் கோப்பு மடத்துக்கு நிலம் அளிப்பது சம்பந்தப்பட்டது தான். நாடெங்கும் இருந்து வரும் பக்தர்களுக்கு ராகவேந்திரர் தனது பிரிந்தாவனத்தில் யோக சமாதி நிலையில் அமர்ந்து அருள் பாலித்து வருகிறார்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)