பல்வேறு சொந்த காரணங்களால், எனது வலைபதிவுகளை
தொடர்ந்து எழுத முடியாமல் இருந்ததுது. ஒரு நீண்ட இடைவெளிக்கு பின்பு மீண்டும் எழுதுகிறேன்.
ஹரித்வாரில் தக்ஷன் கோவில் மற்றும் பவன் தாம்
போன்ற கோவில்களையும் பார்த்த பிறகு நாங்கள் ரிஷிகேஷ் சென்றடைந்தோம். ரிஷிகேஷில் கங்கை
கரை ஓரம் ஒரு விடுதியில் தங்கியிருந்தோம். அங்கிருந்து பார்த்தால் லக்ஷ்மண் ஜூலா தெரியும்.
லக்ஷ்மண் ஜூலா என்பது கங்கையின் இரு கரைகளையும் இணைக்கும் ஒரு தொங்கு பாலம். இந்த பாலம்
இருக்கும் இடத்தில் லக்ஷ்மணன் ஒரு கயிறு மூலமாக இந்த கரையில் இருந்து அந்த கரைக்கு
கடந்ததாக நம்பப்படுகிறது. அதனால் அதற்கு லக்ஷ்மண் ஜூலா என்று பெயர். 1924 ஆம் ஆண்டு
கங்கையில் வந்த வெள்ள பெருக்கால் பாலம் அடித்து சென்ற போது 1930 ஆண்டு பொதுபணித்துறையால்
மீண்டும் கட்டப்பட்டது. இதற்கு இணையாக 2 கி.மீ தள்ளி இன்னொரு பாலம் உள்ளது. அதற்கு
ராம் ஜூலா என்று பெயர்.
லக்ஷ்மண் ஜூலா வழியாக அக்கரைக்கு சென்று அங்கிருந்து
டாக்ஸி அல்லது Van மூலம் நீலகண்டர் கோவிலுக்கு செல்ல வேண்டும். போக வர ஒரு நபருக்கு
120 ரூபாய் வாங்கினார்கள். மலை மேல் செல்லும் பாதை மிகவும் குறுகலாகவும் மோசமாகவும்
இருந்தது. வழி நெடுக குரங்குகள் இருந்தன. நாங்கள் சென்ற வண்டியை தொற்றிக்கொண்டே குரங்குகள்
வந்தது. கீழே கங்கை நதி ஓடுவதை பார்த்து கொண்டே மலை மேல் செல்லலாம். கோவிலுக்கு சிறிது
முன்பே வண்டிகள் நிறுத்திவிடுகிறார்கள். அங்கிருந்து சிறிது தூரம் நடந்து தான் போக
வேண்டும். இந்த கோவில் கோபுரம் நாம் தமிழ்நாடு கோவில்கள் கோபுரம் போன்று உள்ளது. சுற்றிலும் அடர்ந்த காடுகளுக்கு நடுவே கோவில் உள்ளது. தேவர்களும் அசுரர்களும் சமுத்திரத்தில் அமிர்தம்
கடைந்த போது வந்த நஞ்சை இந்த இடத்தில் தான் சிவ பெருமான் அருந்தி தன் கண்டத்தில் நிறுத்தி
நீல நிறமாக காட்சியளிதிதார் என்பது வரலாறு. சிவராத்ரி சமயங்களில் பக்தர்கள் ஹரித்வாரிலிருந்து
இந்த கோவிலுக்கு பாதயாத்திரையாக வருவது வழக்கம். வடநாட்டில் உள்ளது போல இங்கும் சிவலிங்கம்
தாழ்வாக உள்ளது. இங்கும் நாம் சிவபெருமானுக்கு ஜலாபிஷேகம் செய்யலாம். தரிசனம் செய்த
பின்பு கீழே வந்தோம்.
![]() |
நீலகண்ட மகாதேவர் கோவில் |
ரிஷிகேஷிலும் ஹரித்துவார் போலவே காலையிலும் மாலையிலும் கங்கா ஆர்த்தி செய்கிறார்கள். இதை காண்பதற்கு பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வருகிறார்கள். திரிவேணி காட் மற்றும் பரமார்த்த நிகேதன் என்று இரு இடங்களில் கங்கா ஆர்த்தி செய்கிறார்கள். இரண்டு இடங்களிலும் நாங்கள் கங்கா ஆர்த்தி பார்த்தோம். ஒரு நாள் மாலை திரிவேணி காட்டிலும் இன்னொரு நாள் பரமார்த்த நிகேதனிலும் பார்த்தோம். பஜன் முடிந்தவுடன் ஆர்த்தி காட்டுகிறார்கள். படிக்கட்டுகளில் அமர்ந்திருக்கும் பக்தர்களிடமும் ஆரத்தி தட்டு தருகிறார்கள். நாமும் கங்கைக்கு ஆரத்தி காண்பிக்கலாம். ஹரித்துவாரில் செய்தது போலவே இங்கும் செய்கிறார்கள். கங்கையில் தீபம் பக்தர்கள் மிதக்கவிடுகிறார்கள். இந்த இடத்தில் இருந்த ஒரு மிக பெரிய சிவ பெருமான் சிலையை 2013 இல் வந்த மிக பெரிய வெள்ளம் அடித்து சென்று விட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக