செவ்வாய், 22 டிசம்பர், 2015

மடவார் வளாகம் வைத்தியநாதர் கோவில்,ஸ்ரீவில்லிபுத்தூர்


ஸ்ரீவில்லிபுதூர் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது ஆண்டாள் கோவில் தான். ஆனால் இங்கு மிகவும் பழமையான சிவாலயம் ஒன்றும் உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜபாளயம் சாலையிலுள்ள மடவார் வளாகம் என்னும் இடத்தில் உள்ளது இந்த கோவில். இது மிக பெரிய சிவன் கோவில். சிவ பெருமானின் 24 திருவிளயாடல்கள் இங்கு தான் நடைபெற்றதாக சொல்லபடுகிறது.

இங்கு ஸ்வாமி பெயர் வைத்தியநாதர். அம்மன் பெயர் சிவகாமி அம்பாள். இந்த கோவிலின் சிறப்பு என்று கருதப்படுவது தீராத வயிற்றுவலி மற்றும் சுக பிரசவத்திற்கு இங்கு வந்து வேண்டினால் இறைவன் அருளால் கண்டிப்பாக நிறைவேறும் என பக்தர்கள் நம்புகிறார்கள். கர்ப்பபை சம்பந்தமான நோய்களுக்கும் இங்கு வந்து வேண்டி பக்தர்கள் குணமடைந்ததாக சொல்லப்படுகிறது.

புநல்வெளி எனும் கிராமத்தில் வசித்து வந்த ஒரு ஏழை சிவபக்தனின் மனைவியின் பேறுகாலதிற்கு  அவளது தாயார் வர தாமதமானதால்,அவள் தாய் வீட்டுக்கு சென்ல்லும் நேரத்தில் பிரசவ வலி ஏற்பட்டு ஈசன் நாமத்தை சொல்லி கதறுகிறாள். அவளுக்கு வலி ஏதும் ஏற்படாத வகையில் ஈசன் பிரசவம் பார்த்தார். அந்த நேரம் அந்த பெண்ணுக்கு தாகம் ஏற்பட்டு தண்ணீர் கேட்க  தறையை விரலால் கீறி நீர் வரவைத்து அப்பெண்ணுக்கு வழங்குகிறார் ஈசன்.

மற்றொரு கதை மன்னர் திருமலை நாய்க்கர் பற்றியது. அவருக்கு தீராத வயிற்றுவலி வந்த போது 48 நாட்கள் - ஒரு மண்டல காலம் இங்கு வந்து தங்கி விரதம் இருந்து வயிற்றுவலி குணமாகி சென்றதாக சொல்லபடுகிறது. அதன் பிறகு வைத்தியநாதருக்கு உச்சிக்கால பூஜை முடிந்த பிறகே மதிய உணவு அருந்தும் பழக்கத்தை மன்னர் கடைபிடிக்கிறார். அதற்காக மதுரையிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் பாதையில் குறிப்பிட்ட இடைவெளியில் கல் மண்டபங்கள் கட்டி ,கோவிலில் உக்சிகால பூஜை முடிந்த உடன் முரசு ஒலிக்க செய்தார் . அடுத்த அடுத்த மண்டபங்களில் ஒலிக்கும் முரசு ஒலி முடிவில் மதுரையில் கேட்ட பிறகே மன்னர் மதிய உணவை உண்டு மகிழ்ந்தார். இன்றும் இந்த மண்டபங்கள் இந்த சாலையில் இருப்பதை காணலாம்.

இந்த கோவிலின் மற்றொரு சிறப்பு ஆண்டு தோறும் புரட்டாசி மற்றும் பங்குனி  மாதபிறப்பன்று சூரிய ஒலி மூலவரின் மீது படுமாறு அமைக்கபட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை: