வியாழன், 19 செப்டம்பர், 2013

சமயபுரம் மாரியம்மன் கோவில்

Arulmigu Mariamman
திருச்சிக்கு அருகில் 15 கி.மீ தொலைவில் உள்ளது சமயபுரம் .மாரியம்மன் கோவில்களில் மிகவும் முக்கியமான கோவில் சமயபுரம் மாரியம்மன் கோவில் .மிகவும் பழமை வாய்ந்த அம்மன் கோவில் . சமயபுரத்தின் பழைய பெயர் கண்ணனூர் .ஸ்ரீரங்கத்தில் ரங்கநாத சுவாமி கோவிலில் வைணவி என்று ஒரு அம்மன் இருந்தது.வைணவி அம்மனின் உக்கிரம் தாங்க முடியாமல் ஜீயர் வைணவி விக்கிரகத்தை கோவிலில் இருந்து அப்புறபடுத்தினார் . அந்த விக்கிரகம் கண்ணனூர் என்ற இடத்தில் வைக்கப்பட்டு கண்ணனூர் மாரியம்மன் என்று பொதுமக்கள் வழிபாட்டு வந்தனர் .பிற்காலத்தில் விஜயநகர் மன்னர்கள் அம்மனை வேண்டி போரில் வெற்றி பெற்ற பின்பு அம்மனுக்கு தனி ஆலயம் கட்டினார்கள் .இப்பொழுது நாம் காணும் சமயபுரம் மாரியம்மன் கோவில் விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்டது. சமயத்தில் காப்பாள் சமயபுரத்தாள் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அம்மனை வேண்டி உடன் குணம் அடைகிறார்கள் .அதிகமாக மக்கள் அம்மனக்கு வேண்டி மாவிளக்கு நேர்த்தி கடன் செய்வதை இங்கு காணலாம் .பொதுவாக இங்கு எல்லா செவ்வாய் வெள்ளிகிழமைகளிலும் கூட்டம் அதிகமாக இருக்கும் .ஆடி மாத செவ்வாய் வெள்ளி கிழமைகளில் இன்னும் அதிகமாக இருக்கும். மாசி கடைசி ஞாயிறு அன்று ஸ்ரீமாரியம்மன் பச்சைப்பட்டினி விரதம் மேற்கொள்கிறாள். இந்த விரத 28 நாட்கள் நடக்கும் . இந்த விரத நாட்களில் துள்ளு மாவு, திராட்சை, ஆரஞ்சு, இளநீர் பானகம் போன்றவை மட்டும் அம்மனுக்கு நிவேதிக்கப்படுகிறது. இந்த விரதம் இனிதே நிறைவேற மூலஸ்தான அம்மனுக்கு பூக்களால் அபிசேகம் செய்வதே பூச்சொரிதல் என்று அழைக்கப்படுகிறது.விநாயகர், முருகன், நாககன்னி சன்னதியும் உள்ளது. நாககன்னி சன்னதி முன்புள்ள வேப்ப மரத்தில் குழந்தை இல்லாத பெண்கள் தாங்கள் கட்டி வரும் சேலையின் முந்தானையை கிழித்து மரத்தில் கட்டி ஒரு கல்லை வைத்துவிடுகிறார்கள். இதனால் குழந்தைபேறு ஏற்படும் என்பது நம்பிக்கை. குழந்தை பிறந்ததும் இங்கு வந்து தொட்டிலை அவிழ்த்துவிட்டு அம்பாளுக்கு பூஜை செய்து திரும்புகின்றனர்.

கருத்துகள் இல்லை: