கேரள மாநிலத்தின் தலை நகரமான திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது அனந்த
பத்மநாப சுவாமி திரு கோவில்.பெருமாள் அனந்த சயன கோலத்தில் அமர்ந்திருக்கும்
கோவில் இது .அதனால் தான் இந்த நகருக்கு அனந்தபுரி என்று பெயர். அதுவே
பிற்காலத்தில் திருவனந்தபுரம் என்று அழைக்கபடுகிறது .பெருமாளின் 108 திவ்ய
ஸ்தலங்களில் இதுவும் ஓன்று.திவ்ய பிரபந்தத்தில் இந்த கோவில் குறித்த
பாசுரங்கள் உள்ளது. தமிழ் ஆழ்வார்கள் இந்த கோவில் குறித்து பாசுரங்கள்
இயற்றி உள்ளனர்.கன்யாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டாறு என்ற இடத்தில்
உள்ள ஆதிகேசவபெருமாள் கோவில் போன்றே உருவாக்கிய கோவில் தான்
திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோவில். ஆதிகேசவ பெருமாள்
கோவிலிலும் பெருமாள் சயன கோலத்தில் தரிசனம் தருகிறார்.பத்மநாப சுவாமி
கோவிலை விட பழமை வாய்ந்தது திருவட்டாறு அதிகேசவ பெருமாள் ஆலயம். இதுவும்
108 திவ்ய தேசங்களில் ஓன்று.நம்மாழ்வார் திருவட்டார் கோவில் குறித்து 11
பாசுரங்கள் பாடியுள்ளார்.திருவனந்தபுரம் கோவிலில் பெருமாள் யோகா
நித்திரையில் இருப்பதாக கூறபடுகிறது.மூல சன்னதியில் பெருமாள் ஆதிசேஷன் மேல் சயன கோலத்தில் உள்ளார்.அவரது வலது கை சிவ லிங்கத்தின் மேல் வைத்துள்ளது
போல் உள்ளது .ஸ்ரீதேவி ,பூதேவி சமேதராக காட்சி அளிக்கிறார்.இந்த கோவிலின்
பொக்கிஷங்கள் ஆறு ரகசிய அறைகளில் பாதுகாகபடுகிறது .இதில் ஒரு அறை பத்மநாப
சுவாமிக்கு உரியது என்றும் கோவில் பொக்கிஷங்களுடன் தொடுர்புடயது அல்ல
என்றும் நம்பபடுகிறது.அந்த அறையில் ஒரு ஸ்ரீ சகரமும் ,பத்மநாப சுவாமி
விக்ரஹமும் உள்ளதாக சொல்லபடுகிறது.இந்த கோவிலின் மிக பெரிய திருவிழா என்பது
'லக்ஷ தீப திருவிழா' தான் .இந்த திருவிழா ஆறு வருஷங்களுக்கு ஒரு முறை
மட்டும் கொண்டாடபடுகிறது .இந்த விழாவிற்கு முன்பு 56 நாட்கள் வேத
மந்திரங்கள் பாராயணம் செய்யபடுகிறது .விழாவின் கடைசி நாளன்று லக்ஷ தீபங்கள்
கோவிலை சுற்றி ஏற்றபடுகிறது .லக்ஷ தீப திருவிழா அடுத்து 2014 ஆம் ஆண்டு
நடக்க உள்ளது .இந்த கோவிலில் கேரள கோவில்களில் உள்ள வழக்கப்படி முழுகால்
பான்ட் அணிந்து செல்ல அனுமதியில்லை . சிறுவர்கள் அரைகால் பான்ட் அணியலாம்
.மேல் சட்டை அணிய முடியாது .பான்ட் அணிதிருப்பவர் கண்டிப்பாக வேஷ்டி
அணிந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கபடுவார். அது போல் பெண்களுக்கு சுரிதார்
மற்றும் பான்ட் அணிய அனுமதியில்லை .அவர்கள் கண்டிப்பாக சுரிதார் மேல் ஒரு
வேஷ்டி அணிந்து தான் செல்ல வேண்டும்.இல்லை என்றால் கோவில் உள் செல்ல
அனுமதி மறுக்கப்படும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக