திருநெல்வேலி நகரின் மைய பகுதியில் உள்ளது அருள்மிகு நெல்லையப்பர் கோவில் .
இறைவன் திருநாமம் நெல்லையப்பர் .அம்மன் திருநாமம் காந்திமதி .
ஸ்தல வரலாறு படி ஒரு சிவ பக்தன் தினமும் வீடு வீடாக சென்று பெற்று வந்த
நெல்லை இறைவன் நைவேதியத்துக்கு கொடுப்பது வழக்கம் .இப்படி சேகரித்த நெல்லை
சன்னதி முன் உலரவிட்ட பின் அவர் குளிக்க செல்வது வழக்கம் .ஒரு நாள் அவ்வாறு
குளிக்க சென்ற பொழுது திடீரென்று மழை பெய்திருக்கிறது.நெல நனைந்து விடுமே
என்ற பதட்டத்தில் பக்தன் வேகமாக வந்த பார்த்த பொழுது ஒரு அதிசயத்தை
கண்டார்.நெல் உலருவதற்கு போட்டிருந்த இடத்தில் மட்டும் மழை பெய்யவில்லை
.அதை சுற்றி மட்டும் மழை பெய்திருந்தது .நெல் உலர்த்திய இடத்தில் வெயில்
அடித்தது . இறைவன் நெல்லுக்கு வேலி அமைத்து காத்ததினால் இந்த நகருக்கு
திருநெல்வேலி என்ற காரண பெயர் வந்தது.அதுவரை இந்த ஸ்தலத்தின் பெயர்
வேணுவனம் என்று இருந்ததாக வரலாறு .இன்னொரு சிறப்பு சிவபெருமான் நடராச
பெருமானாக நடனமாடிய ஐந்து திருசபைகளில் ,இதுவும் ஓன்று .நெல்லைஅப்பர்
கோவில் தாமிரை சபை என்று அழைக்க படுகிறது .இங்கும் மதுரை மீனாக்ஷி கோவிலில்
உள்ளது போல ஒரு ஆயிரம் கால் மண்டபம் உள்ளது .ஆண்டுதோறும் அம்மன்
திருகல்யாணம் இந்த மண்டபத்தில் நடைபெறும் .இரண்டாவது பிரகாரத்தில் தாமிரை
சபை உள்ளது .மூன்றாவது பிரகாரத்தில் முரக பெருமானுக்கு தனி சன்னதி
உண்டு.மயில் அமர்ந்த கோலத்தில் பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக காட்சி
தருகிறார்.இன்னொரு சிறப்பு தமிழகம் எங்கும் உள்ள கோவில்களில் மார்கழி மாதம்
அதிகாலை 4 மணிக்கே திறந்து சிறப்பு பூஜைகள் நடைபெறும் .அனால் நெல்லையப்பர்
கோவிலில்
மார்கழி சிறப்பு ஆராதனைகள் இல்லை.அதற்க்கு பதில் கார்த்திகை மாதம்
முழுவதும் அதிகாலை 4 மணிக்கே திறந்து சிறப்பு ஆராதனைகள் செய்யபடுகிறது .
இதை பற்றி மேலும் விவரம் தெரிந்தவர்கள் எதனால் இவ்வாறு செயபடுகிறது என்று
தெரிவிக்கலாம் .இன்னொரு சிறப்பு இங்கு நந்தி வெள்ளையாக உள்ளது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக