குஜராத் மாநிலத்தின் மேற்கு
கடற்கரையோரத்தில் உள்ள சோம்நாத் என்ற ஊரில் உள்ளது இந்த புகழ்பெற்ற சிவாலயம். இந்த
கோவில் 12 ஜ்யோதிர்லிங்க கோவில்களில் முதலாவது. பல்வேறு முஸ்லீம் மன்னர்களாலும் போர்த்துகீஸ்
ஆட்சியிலும் பல முறை படையெடுப்பின் போது முற்றிலுமாக அழிகிக்கப்பட்டு மீண்டும் மீண்டும்
உருவாக்கப்பட்ட ஒரு சரித்திர புகழ் வாய்ந்த சிவஸ்தலம் இது. தற்போதுள்ள கோவில் 1951 ஆம் ஆண்டு சாளூக்கிய கட்டிடக்கலையில்
வடிவமைக்கப்பட்டது. இங்கு மூலவர் நாமம் சோமேஸ்வர் அல்லது சோம்நாத். கோவிலின் காலை மற்றும்
மாலை ஆரத்தி தரிசனம் பார்க்க வேண்டிய ஒன்று.
முதன் முதலாக இந்த கோவில் எப்போது
கட்டபட்டது என்பதற்கு சரியான வாலாற்று சான்றுகள் இல்லை. ஆனால் இரண்டாம் முறை 6 ஆம்
நோற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. பின்பு 7 ஆம் மற்றும் 8 ஆம் நூற்றாண்டில் படையெடுக்கப்பட்டு
மீண்டும் கட்டியெழ்ழுப்பப்பட்டது. 10 ஆம் நூற்றாண்டில் முகமது கஜினி படையெடுத்து ஜ்யோதிர்லிங்கத்தை
எடுத்து சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது. தவிர கோவிலை சேர்ந்த பெரும் செல்வங்களையும்
கொள்ளையடித்து சென்றதாக சொல்லப்படுகிறது. பின்பு 12 ஆம் நூற்றாண்டில் அலாவுதீன் கில்ஜி
விலைமதிப்பற்ற கோவில் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளான். பின்பு 13 ஆம் நூற்றாண்டில்
இரு முறை கோவில் மீது படையெடுத்தார்கள். அதன் பின்பு 15 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசிய
ஆட்சியாளர்கள் பல இந்து ஆலயங்கள் மற்றும் மசூதிகளை அழித்தார்கள். அதில் சோமாநாத் ஆலயமும்
ஒன்று. 16 ஆம் நூற்றாண்டில் முகாலய மன்னர் அவுரங்கசீப் சோம்நாத் ஆலயத்தை முற்றிலுமாக
அழிக்க உத்தரவிட்டார். 17ஆம் நூற்றாண்டில் மாறாத்திய மன்னர் லாகூர் சென்று கோவிலிலிருந்து
திருடி சென்ற 3 வெள்ளி கதவுகளை திரும்ப கொண்டு வந்தார். ஆனால் கோவில் பூசாரிகள் மீண்டும்
அந்த கதவுகளை கோவிலில் நிறுவ மறுத்ததினால் அந்த கதவுகள் உஜ்ஜைனிலுள்ள மகா காலேஸ்வர்
கோவிலிலும்(மற்றொரு ஜ்யோதிர்லைங்க கோவில்) கோபால் கோவிலில் வைத்துள்ளதை இன்றும் பார்க்கலாம்.
மூன்ஸ்டோன் என்ற பிரபல ஆங்கில நாவலில் சொல்லப்படும் வைரம் சோம்நாத் கோவிலிலிருந்து
திருடப்பட்டது தான். சோமாநாத், ஜூனாகத் என்ற சம்ஸ்தானத்தை சேர்ந்தது.
நாடு சுதந்திரம் பெற்ற பொழுது ஜூனாகத் மன்னர் அவரது சமஸ்தானத்தை பாகிஸ்தானுடன் இணைத்தார்.
அதை ஏற்றுக்கொள்ளாத வல்லபாய் பட்டேல் இந்திய ராணுவத்தை அனுப்பி ஜூனாகத் ஐ கைபற்றினார்.
கைப்பற்றியது மட்டுமில்லாமல் கோவிலை புனருத்தாரணம் செய்ய உத்தரவிட்டார். அங்கிருந்த
மசூதியை வேறு இடத்துக்கு மாற்றி விட்டு கோவிலை மீண்டும் கட்டியெழுப்பினார். இன்று நாம்
காணும் சோம்நாத் ஆலயம் 1951 ஆண் ஆண்டு கட்டியெழுப்பியது தான். இந்த வரலாறு முழுதும்
கோவிலில் மிக அழகாக ஒலி ஒளி காட்சியாக காண்பிக்கிறார்கள்.
தினமும் இரவு ஆரத்தி முடிந்தவுடன் இரு காட்சிகளாக அரை மணி நேரம் இந்த ஒலி ஒலி காட்சி
நடைபெறுகிறது. இதற்கு தனி கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. கடற்கரையோரம் இந்த கோவில்
உள்ளது. வெளிப்புறத்தில் இருந்து கடல் நோக்கி அமர்ந்து இயற்கையை ரசிக்கவும் பெஞ்சுகள்
போட்டுள்ளார்கள்.
இன்னொரு சுவாரசியமான தகவல் சோம்நாத் கடற்கரையிலிருந்து அண்டார்டிக்கா வரையுள்ள நேர்கோடில் உள்ள ஒரே நிலப்பகுதியில் தான் இந்த கோவில் அமைந்துள்ளது. கோவிலில் உள்ள அம்பு தூண்(Arrow Pillar) அமைந்திருக்கும் இடம் வட துருவத்திலிருந்து தென் துருவம் வரையிலான நிலப்பகுதியிலுள்ள புவி நெடுங்கோடின் முதல் புள்ளியாகும். இத்தகவலை பாணஸ்தம்பம் என்றழைக்கப்படும் அந்த தூணில் வடமொழியில் எழுதி வைத்துள்ளார்கள். இந்த கோவிலில் முன்பு இடிக்கப்பட்ட பார்வதி கோவில் மட்டும் மீண்டும் கட்டியெழுப்பப்படாமல் அதே இடத்தில் வெறும் அடித்தளத்துடன் அப்படியே விட்டு வைத்துள்ளார்கள்.ஏனென்று தெரியவில்லை.
![]() |
பாணஸ்தம்பம் |
இன்னொரு சுவாரசியமான தகவல் சோம்நாத் கடற்கரையிலிருந்து அண்டார்டிக்கா வரையுள்ள நேர்கோடில் உள்ள ஒரே நிலப்பகுதியில் தான் இந்த கோவில் அமைந்துள்ளது. கோவிலில் உள்ள அம்பு தூண்(Arrow Pillar) அமைந்திருக்கும் இடம் வட துருவத்திலிருந்து தென் துருவம் வரையிலான நிலப்பகுதியிலுள்ள புவி நெடுங்கோடின் முதல் புள்ளியாகும். இத்தகவலை பாணஸ்தம்பம் என்றழைக்கப்படும் அந்த தூணில் வடமொழியில் எழுதி வைத்துள்ளார்கள். இந்த கோவிலில் முன்பு இடிக்கப்பட்ட பார்வதி கோவில் மட்டும் மீண்டும் கட்டியெழுப்பப்படாமல் அதே இடத்தில் வெறும் அடித்தளத்துடன் அப்படியே விட்டு வைத்துள்ளார்கள்.ஏனென்று தெரியவில்லை.
![]() |
பழைய சோம்நாதர்
ஆலயம் |
கோவிலுக்கு வெளிப்புறம் பழைய
சோமநாதர் ஆலயம் என்றொரு ஆலயம் உள்ளது. அதுவும் பார்க்க வேண்டிய ஒன்று. மராத்தா ராணி அகல்யாபாயி ஹோல்கர் என்பவரால் 17 ஆம்
நூற்றாண்டில் கட்டப்பட்டது இந்த கோவில். அடிக்கடி நடக்கும் படையெடுப்பினால் அழிந்து
போகும் சோம்நாத் ஆலயம் குறித்து ராணி அகல்யா மிகவும் வருந்தினார், அவரது கனவில் இங்குள்ள சுயம்புலிங்கம் இருக்கும் இடம் தெரிந்ததாகவும், அதை தொடர்ந்து அவர் இங்கு சுயம்பலிங்கம் இருப்பதை கண்டு கோவில் கட்டியதாகவும்
கூறப்படுகிறது. வேறு சிலர், படையெடுப்பை தவிர்ப்பதற்காக அசல் சோமேஸ்வர் லிங்கத்தை இங்கு
இந்துக்கள் புதைத்து வைத்ததாக கூறுகிறார்கள். இங்குள்ளது தான் அசல் சிவலிங்கம் என அவர்கள்
கூறுகிறார்கள். இங்கு பக்தர்கள் சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்த கோவிலை இங்குள்ள மக்கள் அகல்யாபாய் ஹோல்கர் கோவில் என்றும் அழைக்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக