நாமக்கல் ஆஞ்சநேய சுவாமி கோவில் , லக்ஷ்மி நரசிம்மர் ஆலயத்தின் நிர்வாகத்தில் வரும் கோவில் . லக்ஷ்மி நரசிம்மர் ஆலயத்திற்கு நேர் எதிர்புறம் ஆஞ்சநேய சுவாமி ஆலயம் உள்ளது.மலை அடிவாரத்தில் உள்ள குடைவரை கோவில் லக்ஷ்மி நரசிம்மர் ஆலயம். நரசிம்மரை நோக்கி வணங்கி நிற்பது போல எதிர்புறம் ஆஞ்சநேய சுவாமி கோவில் உள்ளது .ஆஞ்சநேய சுவாமி சிலை 18 அடி உயரம் கொண்டது . ஆரம்ப காலத்தில் லக்ஷ்மி நரசிம்மர் ஆலயத்திற்கு எதிர்புறம் வெட்ட வெளியில் தான் ஆஞ்சநேய சுவாமி பக்தர்களுக்கு தரிசனம் தந்து கொண்டிருந்தார்..தற்பொழுது கோவிலை சுற்றி மண்டபம் எழுப்ப பட்டிருந்தாலும் ஆஞ்சநேய சுவாமிக்கு மேல் கூரை ஏதும் இல்லாமல் இப்பொழுதும் வெட்டவெளியில் தான் இருக்கிறார். ஆஞ்சநேய சுவாமிக்கு மேல்புறம் கட்டடம் ஏதும் எழுப்ப இயலவில்லை என்றும் இங்கு பலராலும் சொல்லபடுகிறது . கிட்ட தட்ட 2000 ஆண்டு பழமையான கோவில் இது.நாமக்கல் ஆஞ்சநேய சுவாமியின் இன்னொரு சிறப்பு ,கையில் ஜெப மாலையுடனும் இடுப்பில் வாளுடனும் இங்கு பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார். ஆஞ்சநேய சுவாமி கோவிலில் மிகவும் அழகாக அஷ்டபுஜ நரசிம்மர்,வைகுண்ட பெருமாள்,வராஹர்,உலகாண்ட பெருமாள் ஆகியோரின் வண்ண ஓவியங்கள் சுவர்களில் வரையப்பட்டுள்ளது .திருமண வரம் ,குழந்தை பேறு , கல்வியில் சிறப்பு வேண்டி அதிக அளவில் பக்தர்கள் இங்கு வருகிறார்கள். தேர்வு எழுத செல்லும் முன் மாணவர்கள் அதிக அளவில் நாமக்கல் ஆஞ்சநேயரை வந்து வணங்கி செல்கிறார்கள் .
லக்ஷ்மி நரசிம்மர் ஆலயத்தில் உள்ள நரசிம்மர் சிலை மலையை குடைந்து உருவானது.
ஹிரண்ய வதம் செய்ததால் நரசிம்மரின் கை நகங்களின் கூர்மையை சுவாமி சிலையில்
காணலாம்.மற்றுமொரு ஆதிசயம் சுவாமியின் உள்ளங்கையில் ரத்த கறை இன்றும்
காண்பது தான். கருவறையில் நரசிம்மருடன் சனாதனர் ,சூரியன் ,சந்திரன் பிரம்மா ஆகியோரும்
உள்ளனர்.வழக்கமாக லக்ஷ்மி நரசிம்மர் ஆலயத்தில் சுவாமியின் மடியில்
லக்ஷ்மியை அமர்ந்த கோலத்தில் காணலாம் .ஆனால் இங்கு லக்ஷ்மி சுவாமியின் மார்பில் உள்ளார்.குடவரை கோவில் என்பதால் சுவாமிக்கு திருமஞ்சனம் செய்வது கிடையாது. உற்சவருக்கு தான் இங்கு திருமஞ்சனம் செய்யபடுகிறது ..நாமகிரி தாயார் (மகாலட்சுமி)சன்னதி தனியாக கிழக்கு நோக்கி அமைந்து உள்ளது .
ஆஞ்சநேய சுவாமி நேபாளத்தில் உள்ள கண்டகி நதியில் ஸ்நானம் செய்து கொண்டிருக்கும் பொழுது அவர் கையில் விஷ்ணுவின் சாளிக்ராம் கிடைக்கிறது.அதை எடுத்து கொண்டு சுவாமி வான வீதியில் பறந்து வந்து கொண்டிருந்தார்.பயணத்தின் போது மீண்டும் ஒரு முறை ஸ்நானம் செய்ய விரும்பினார்.அனால் அவர் சாளிகிராமை தரையில் எங்கும் வைக்க விரும்ப வில்லை .அப்பொழுது
மகாலக்ஷ்மி தவம் செய்து கொண்டிருப்பதை பார்க்கிறார்.என்ன தவம் என்று
வினவுகிறார். நரசிம்ம சுவாமி தரிசனம் வேண்டி தவம் செய்கிறேன் என்கிறார்
மகாலட்சுமி.சாளிகிராமை தான் குளித்து வரும் வரை பாதுகாப்பாக
வைத்திருக்கும்படி வேண்டுகிறார்.அன்ஞ்சநேய சுவாமியின் வேண்டுகோளை ஏற்று
கொண்ட மகாலட்சுமி தாயார் ஒரு நிபந்தனை விதிக்கிறார் .குறிப்பிட்ட நேரத்தில்
ஆஞ்சநேயர் வராவிட்டால் சாளிகிராமை தரையில் வைத்துவிடுவேன் என்று
சொல்கிறார்.ஆஞ்சநேயசுவாமியால் குறித்த நேரத்தில் வர முடியவில்லை .மகாலக்ஷ்மி சாளிகிராமை தரையில் வைத்து விடுகிறார்.சாளிகிரமம் வளர்ந்து பெரிய மலை ஆகிறது .அது தான் நாமக்கல் மலை.நரசிம்மர் லக்ஷ்மி முன் தோன்றி தரிசனம் தருகிறார். ஆஞ்சநேயரும் நரசிம்ம சுவாமியை நோக்கி வணங்கி நிற்கிறார். இது தான் நாமக்கல் கோவில் தல வரலாறு. நாமக்கல் சேலத்தில் இருந்து 52 கி.மீ தொலைவில் உள்ளது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக