செவ்வாய், 7 அக்டோபர், 2008

சேண்பாக்கம் செல்வ விநாயகர் ஆலயம்



சென்னை பெங்களூரு தேசீய நெடுஞ்சாலையில் இருந்து சுமார் இரண்டு கி.மீ. தூரத்தில் உள்ளது சேண்பாக்கம் செல்வா விநாயகர் ஆலயம்.மிகவும் பழமை வாய்ந்த சுயம்பு ஆலயம். ஆரம்ப காலத்தில் ஸ்வயம்பாக்கம் என்பது இந்த தலத்தின் பெயராக இருந்திருக்கிறது.காலபோக்கில் அது மருவி சேண்பாக்கம் என்றாகி விட்டது.சுயம்புவாக செல்வா விநாயகர் இங்கு எழுந்தருளி இருப்பதால் வந்த பெயர் இது.ஆதி சங்கரர் ஒரு முறை விரிஞ்சபுரம் மர்கபன்தீஸ்வரர் ஆலயத்திற்கு வந்திருந்த போது அவரது ஞான திருஷ்ட்யில் இங்கு ஒரு சுயம்பு ஆலயம் இருப்பது தெரிந்திருக்கிறது.இந்த தகவலை காஞ்சி பெரியவர் தனது 'தெயவத்தின் குரல்' நூலில் தெரிவித்துள்ளார்.இந்த கோவிலில் செலவ விநாயாகரை சுற்றி பத்து சுயம்பு விநாயகர்கள் லிங்க வடிவத்திலும் ஓம் வடிவத்திலும் உள்ளது. முன்னொரு காலத்தில் இந்த சுயம்பு விநாயகர்கள் மண்ணிற்குள் புதைந்து கிடந்ததாக கூறப்படுகிறது.சரபோஜி மன்னர் காலத்தில் இருந்த மந்திரி துகோஜி ஒரு முறை இந்த வழியாக தனது ரத்தில் போய் கொண்டிருந்த போது அச்சு முறிந்து ரதம் இங்கு நின்று விட்டது .ரதம் நின்ற இடத்தில் இருந்து ரத்தம் பீறிட்டிருக்கிறது. தனது பயணம் தடைபட்டதில் வருத்தப்பட்ட துகோஜி விநாயகரிடம் வேண்டுகிறார்.அவரது கனவில் வந்த விநாயகர்,தான் இந்த இடத்தில் புதையுண்டு இருப்பதாகவும்,அங்கு ஒரு ஆலயம் எழுப்பவும் பணிக்கிறார்.இன்றும் செல்வவிநாயகர் தலையில் ரதத்தின் சக்கர தடம் இருப்பதாக கூறப்படுகிறது.செல்வா விநாயகருக்கு எதிர்புறம் சனீஸ்வரன் சந்நிதி உள்ளது.சந்நிதிக்கு மேற்கூரை இல்லாதது மற்றுமொரு சிறப்பு.75 ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட வெள்ளி கவசம் விநாயகருக்கு தற்பொழுது பொருந்தவில்லை.விநாயகர் சிலை வளர்ந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: