தமிழகத்திலிருக்கும் பிள்ளையார்பட்டி போல இது ஒரு விநாயகர் ஸ்தலம். ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பெங்களூரில் இருந்து கோலார் வழியாக சித்தூர் சென்றடையலாம். சித்தூர், பெங்களூரில் இருந்து சுமார் 185 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த சாலை சுமாராக உள்ளது. ஆனால் சித்தூரில் இருந்து காணிப்பாக்கம் செல்லும் சாலை மோசமாக உள்ளது. சென்னையில் இருந்தும் திருப்தியில் இருந்தும் காணிபாக்கத்தை எளிதில் சாலை மார்கமாக வந்தடையலாம்.
ஒன்றாம் குலோத்துங்க சோழ அரசரால் 11 ம நூற்றாண்டில் இந்த ஆலயம் கட்டப்பட்டது என்று சொல்லப்படுகிறது . அதன் பின் விஜயநகர அரசரர்களால் இந்த ஆலயம் விரிவுபடுத்தப்பட்டது என்று சொல்லப்படுகிறது.
ஸ்தல புராணம்
இந்த கிராமத்தில் உடற்குறை உள்ள மூன்று சகோதரர்கள் இருந்தார்கள். ஊமை,செவிடு,குருடு என்று குறை உள்ள இந்த மூவரும் விவசாயம் செய்து பிழைத்த வந்தார்கள். விவசாயத்துக்கு அருகில் இருந்த ஒரு கிணறில் இருந்து தண்ணீர் எடுத்து வந்தர்ர்கள் .ஒரு நாள் கிணற்றில் தண்ணீர் வற்றி விடவும்
ஒரு நபர் கடப்பாரையை கொண்டு தோண்ட துடங்க ,கடப்பாரை எதோ ஒரு கல்லில் படுவது போல தெரிந்திருக்கிறது .பார்க்கையில் அங்கு ஒரு விநாயகர் சிலை இருந்திருக்கிறது . அந்த சிலையில் தலையில் இருந்து இரத்தம் வடிய ஆரம்பித்து இருக்கிறது . அந்த வினாடியே மூவருக்கும் உள்ள குறையும் நிவர்த்தியாகிறது.சற்று நேரத்தில் கிணத்து நீர் சிவப்பாகி விடுகிறது . கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து விநாயகர் சிலையை கிணற்றில் இருந்து முழுவதுமாக எடுக்க முயற்சிக்கிறார்கள். அவர்கள் முயற்சி பலிக்கவில்லை. இன்றும் விநாயகர் நீர் சூழ் அந்த கிணற்றினுள்ளயே இருக்கிறார். முழுவதுமாக வெளிப்படாத நிலையிலையே காட்சி தருகிறார்.
இன்னொரு அதிசய நிகழ்வு ,இந்த விநாயகர் சிலை வளர்ந்து கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் ஒரு பக்தை விநாயகருக்கு கவசம் சார்தியிருக்கிறார். அந்த கவசம் தற்பொழுது சார்த்த முடியாத அளவிற்கு சிலை வளர்ந்திருக்கிறது என்று கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக