வெள்ளி, 18 ஏப்ரல், 2014

சாமுண்டேஸ்வரி கோவில் -மைசூரு





மைசூரில் இருந்து சுமார் 13 கி.மீ தொலைவில் உள்ளது சாமுண்டி மலை .ஏறத்தாழ 3500 அடி உயரத்தில் உள்ள இந்த மலை மேல் தான் சாமுண்டேஸ்வரி கோவில் உள்ளது .துர்கை அம்மனின் ரௌத்திர கோலம் தான் சாமுண்டேஸ்வரி அம்மன். மைசூரு ராஜ வம்சத்தின் குல தெய்வம் சாமுண்டேஸ்வரி அம்மன். மேலே வாகனங்கள் செல்ல மலை பாதையும் நடந்து செல்ல படிகளும் உள்ளது .ஏறத்தாழ  பாதி தூரத்தில் அழகான 16 அடி உயர நந்தி சிலை உள்ளது . 18 சக்தி பீடங்களில் சாமுண்டேஸ்வரி கோவிலும் உள்ளது .சாமுண்டேஸ்வரி மூல விக்கிரகம் தங்க மூலாம் பூசப்பட்டது . மூல ஸ்தான கதவுகள் வெள்ளியிலானது .மலை மேல் உள்ள நந்திக்கு அருகில் ஒரு சிறிய சிவன் கோவிலும் உள்ளது .நீண்ட வரிசையில் நின்று தான் தரிசனத்திற்கு செல்ல வேண்டும் . அனுமதி சீட்டு பெற்று சென்றால் சற்று சீக்கிரம் தரிசனம் செய்யலாம் .இன்னும் சில கோவில்களும் மலை மேல் உள்ளது .இது தவிர லலித் மஹால் என்று ஒரு சிறிய மஹால் உள்ளது .மைசூரு ராஜ வம்சத்தை சேர்ந்தவர்கள் வந்தால் இங்கு தங்குவார்கள் என்று சொல்கிறார்கள் .மலை மேல் இருந்து   பார்த்தால் அழகான மைசூரு நகரின் அழகை பார்த்து ரசிக்கலாம் .






கருத்துகள் இல்லை: