புதன், 18 செப்டம்பர், 2013

தாயுமானவர் கோவில் & உச்சி பிள்ளையார் கோவில் -திருச்சி

Thaayumaanavar and sukantha kunthalaambikai

திருச்சி நகரின் நடு பகுதியில் அமைந்துள்ள மலைகோட்டையில் அமைந்துள்ள கோவில் தான் தாயுமானவர் கோவில்.இது ஒரு பாடல் பெற்ற ஸ்தலம் .இங்குள்ள இறைவன் சுயம்பு மூர்த்தி . தாயுமானவர் கோவில் செல்ல 417 படிகள் ஏற வேண்டும்.சுமார் 273 அடி உயரத்தில் உள்ளது தாயுமானவர் கோவில் .தாயுமானவர் கோவிலுக்கு தென் கயிலாயம் என்று மற்றொரு பெயர் உண்டு.இங்கு இறைவன் பெயர் தாயுமானவர், மாத்ருபூதேஸ்வரர்.இறைவி பெயர் சுகந்த குந்தளாம்பிகை, மட்டுவார் குழலியம்மை.இந்த மலை திருச்சியில் வந்ததற்கு ஒரு வரலாற்று கதை உள்ளது. ஒரு முறை கைலாயத்தில் சிவ பெருமானை வணங்க ஆதிசேஷனும் வாயு பகவானும் வந்திருந்தனர் .ஆதிசேஷனை எல்லோரும் புகழ்ந்ததை கண்டு வாயு பகவானுக்கு பொறாமை ஏற்படுகிறது.வாயு பகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் மோதல் நடக்கிறது .ஆதிசேஷன் கைலாய மலையை தன உடலால் இறுக்குகிறார் உடனே வாயு பகவான் பலத்த காற்றை வீசுகிறார்.கைலாய மலை உடைந்து அதிலிருந்து 3 துண்டுகள் திருக்காளத்தி, திருச்சி, இலங்கையில் உள்ள திரிகோணம் என்ற இடங்களில் விழுகிறது..அன்று திருச்சியின் பெயர் திரிசரமலை.
 
இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக தோன்றினார்.இங்குள்ள சிவலிங்கம் 5 அடி உயரத்தில் உள்ளது .கோவில் 3 தலங்களாக உள்ளது . முதல் தளத்தில் அம்மன் சன்னதி உள்ளது . இரண்டாம் தளத்தில் சுவாமி சன்னதி உள்ளது .ரத்தினாவதி என்று ஒரு சிவபக்தை அந்த ஊரில் இருந்தார். அவருக்கு பிரசவ சமயத்தில் உதவ அவரது தாய் காவிரியின் அக்கரையில் இருந்து வர முயற்சிக்கும் பொழுது காவிரியில் வெள்ள பெருக்கு இருந்ததால் வரமுடியவில்லை.அச்சமயம் இறைவன் அப்பெண்ணின் தாய்  உருவில் வந்து அப்பெண்ணுக்கு சுக பிரசவம் ஆக உதவுகிறார்.அதனால் இங்கு இறைவன் பெயர் தாயுமானவர். இந்த சிவஸ்தலத்தில் குழந்தை பேறு ,சுக பிரசவம் போன்றவைக்கு பக்தர்கள் வேண்டுவது வழக்கம் . இத்தலத்தில் தக்ஷிணாமூர்த்தி மற்றும் முத்துகுமாரஸ்வாமிக்கு தனி சன்னதிகள் உள்ளது .அருணகிரிநாதர் இத்தல முருகன் குறித்து பாடல்கள் இயற்றியுள்ளார் .இது தவிர முருகன் வள்ளி தேவசேனா சகிதமாக காட்சி தரும் சன்னதியும் உள்ளது .


தாயுமானவர் கோவில் உச்சியில் உள்ள மலை மீது உச்சி பிள்ளையார் கோவில் உள்ளது.கீழே மலை அடிவாரத்தில் உள்ளது மாணிக்க விநாயகர் கோவில் .முதலில் மாணிக்க விநாயகரை தரிசனம் செய்துவிட்டு தாயுமானவரையும் அம்மனையும் தரிசித்து விட்டு உச்சி பிள்ளையார் கோவில் தரிசனம் செய்ய வேண்டும் .திருச்சி மலைகோட்டை உலகிலேயே மிகவும் பழமையான பாறை என்ற பெருமையுடையது .3800 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை என்று கருதப்படுகிறது. கிரீன்லாந்து, இமயமலைப் பாறைகளைவிட பழமையானது என்று சொல்லபடுகிறது.ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மலைகோட்டை அரண் கதவு மெயின் கார்ட் கேட் என்று அழைக்க பட்டது .இன்றும் அப்பெயர் நிலவில் உள்ளது. மலைகோட்டை தெப்பக்குளத்தின் அருகில் ராபர்ட் கிளைவு என்ற ஆங்கிலேயர் வாழ்ந்த இல்லம் இப்பொழுதும் உள்ளது.



கருத்துகள் இல்லை: