தஞ்சை -திருவையாறு சாலையில் உள்ள கண்டியூர் அருகில் உள்ளது திருவேதிக்குடி .மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவில் சரியான பராமரிப்பு இல்லாமல் இருப்பதை பார்த்தபோது மிகவும் வருத்தமாக இருந்தது .கோவில் கோபுரத்தில் செடிகள் வளர்ந்து நிற்கிறது . இங்கு ஒரு கால பூஜை தான் நடை பெறுகிறது.கோவில் காலை 10 மணிக்கு தான் திறக்கிறார்கள்.கோவில் பூஜை செய்பவருக்கும் காவலருக்கும் சம்பளம்ஏதும் இல்லை என்றும் சொன்னார்கள். அறநிலைய துறையின் கீழ் இயங்கும் கோவில் என்று தான் சொல்கிறார்கள்.பின்பு ஏன் இந்த அவல நிலை என்று தெரியவில்லை..திருவேதிகுடி ஒரு பாடல் பெற்ற ஸ்தலம். திருஞானசம்பந்தர் நிறைய பதிகங்களில் திருவேதிகுடி குறித்து பாடியுள்ளார்.திருமண வரம் வேண்டுவோர் மங்கையர்க்கரசி உடனுறை வேதபுரீஸ்வரரைவேண்டினால் திருமணம் கை கூடுவது திண்ணம்.வேதபுரீஸ்வரர் ஒரு சுயம்புமூர்த்தி .ஒவ்வொரு பங்குனி மாதமும் 13-14 தேதிகளில் சூரிய ஒளி இறைவன் மேல் விழும் அதிசயத்தை இந்த கோவிலில் காணலாம் .வாழை தோப்பில் இருந்து இறைவன் சுயம்புவாக வந்ததால் இறைவனுக்கு மற்றொரு பெயர் வாழைமாடு நாதர் .பிரம்மா இங்கு சிவனை வழிபட்டதால் இந்த ஊருக்கு திருவேதிக்குடி என்று பெயர் வந்தது என்று சொல்லபடுகிறது.தி.ருநாவுக்கரசரும் இந்த சிவ ஸ்தலம் குறித்து பதிகங்கள் பாடியுள்ளார்.பொதுவாக உமையவள் அர்த்தநாரீஸ்வரரின் இடது புறம் தான் இருப்பது வழக்கம்.ஆனால் திருவேதிகுடியில் உமையவள் ஈசனின் வலதுபுறம் இருப்பதை காணலாம் .மங்கையர்க்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இறைவன் இங்கு இவ்வாறு காட்சி அளிக்கிறார்.முன்னொரு காலத்தில் வேத விற்பன்னர்கள் அதிக அளவில் இந்த ஊரில் இருந்ததாக நம்பபடுகிறது.ரிக் வேதம் ,யஜுர் வேதம் ,சாம வேதம் அதர்வ வேதம் நான்கிலும் சிறந்தவர்கள் இங்கு வாழ்ந்ததாக நம்பபடுகிறது .அப்பொழுது இந்த ஊரின் பெயர் சதுர்வேதி மங்கலம் . நான்கு வேதங்களிலும் சிறந்தவர்கள் இருந்ததால் இந்த காரண பெயர் இந்த ஊருக்கு இருந்திருக்கிறது.நான்கு வேதங்களிலும் இறைவனை வழிபடுவதை சுவாமி சன்னதிக்கு வெளியில் இருக்கும் விநாயகர் செவி சாய்த்து கேட்டதால் இந்த விநாயகருக்கு பெயர் செவி சாய்த்த விநாயகர்.. இன்றும் அந்த விநாயகர் சாய்ந்த நிலையில் இருப்பதை காணலாம்.இந்திரன் ,வியாச முனிவர் ,விஷ்ணு ஆகியோர் இங்கு சிவனை வழிபட்டதாக கூறபடுகிறது .இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த கோவில் சரியான முறையில் பராமரிக்கப்பட்டு ஐந்து கால பூஜை இல்லாவிட்டாலும் குறைந்த பட்சம் மூன்று கால பூஜை நடக்கும் அளவுக்கு அரசும் ,அறநிலைய துறையும் ,பக்தர்களும் சேர்ந்து ஆவன செய்ய வேண்டும் என்பது பலரது ,குறிப்பாக இந்த ஊர் மக்களின் விருப்பம் .
Mangayarkarasi amman |
இந்த கோவிலின் பெயர் பலகையில் திருமண தோஷம்,தடை நீக்கும் பரிகார ஸ்தலம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது . திருமண தடை,தோஷம் பரிகாரத்திற்கு சம்பந்தர் ,திருநாவுக்கரசர் அருளிய கீழ்கண்ட பதிகம் கோவிலில் அறிவிப்பாக எழுதி வைத்துள்ளார்கள் .
"உன்னி இருபோதும் அடியேனும் அடியார்தம்
இடர் ஒல்க அருளி கன்னியரோடு ஆடவர்கள்
மாமணம் விரும்பி அருமங்கலமிக மின்இயலும்
நுன் இடை நன் மங்கையர் இயற்றுபதி வேதிகுடியே ' -சம்பந்தர்
இப்பாடலை கலை மாலை இருவேளையும் பாராயணம் செய்தால் திருமணம் விரைவில் நடக்கும் என்று சம்பந்தர் ஆணையிட்டு பாடிய திருத்தலம் தான் திருவேதிக்குடி .
திண்ணன் வினை தீர்க்கும் பிரான் திருவேதிக்குடி
நண்ண வரிய அமுதினை நாமடைந்தாடுதுமே ' - நாவுக்கரசர்
"உன்னி இருபோதும் அடியேனும் அடியார்தம்
இடர் ஒல்க அருளி கன்னியரோடு ஆடவர்கள்
மாமணம் விரும்பி அருமங்கலமிக மின்இயலும்
நுன் இடை நன் மங்கையர் இயற்றுபதி வேதிகுடியே ' -சம்பந்தர்
இப்பாடலை கலை மாலை இருவேளையும் பாராயணம் செய்தால் திருமணம் விரைவில் நடக்கும் என்று சம்பந்தர் ஆணையிட்டு பாடிய திருத்தலம் தான் திருவேதிக்குடி .
திண்ணன் வினை தீர்க்கும் பிரான் திருவேதிக்குடி
நண்ண வரிய அமுதினை நாமடைந்தாடுதுமே ' - நாவுக்கரசர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக