கும்பகோணம் அருகே உள்ள திருவலஞ்சுழியில் சடைமுடிநாத சுவாமி கோவில் உள்ளது. அம்பாள் பெயர் பெரியநாயகி . இந்த கோவிலில் தான் ஸ்வேதா விநாயகர் அல்லது வெள்ளை பிள்ளையார் சன்னதி உள்ளது .இந்த கோவில் வெள்ளை பிள்ளையார் கோவில் என்றே பிரபலமாக அறியபடுகிறது .இத்தலத்தில் காவிரி நதியானது ஈசனை வலம் சுழித்து வழிபட்டு சென்றதால் திருவலஞ்சுழி என்னும் காரணப்பெயர் பெற்றது.அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை மிக அருகில் உள்ளது.இந்த விநாயகருக்கு மற்றொரு பெயர் ஸ்வேதா விநாயகர் என்பதாகும்.இந்த விநாயகர் மூர்த்தி 9 அங்குலம் மட்டுமே உள்ள வெள்ளை நிற விநாயகர். தேவர்கள் திருப்பாற்கடல் கடையும் பொழுது விநாயகரை வழிபடாமல் ஆரம்பித்து விட்டார்கள் .அதனால் அந்த காரியம் தடைபட்டது.உடனே தேவேந்திரன் கடல் நுரையயே பிள்ளையார் உருவாக்கி பூஜை செய்தான்.பூஜை முடிந்த உடன் பிள்ளயார அசைக்க முயன்ற பொது முடியவில்லை .அதனால் இந்த விநாயகருக்கு இன்னொரு பெயர் நுரை விநாயகர்.ஸ்வேதா விநாயகர் சன்னதி முன் 16 துளைகளுடன் கூடிய ஒரு பலகணி உள்ளது.பாடல் பெற்ற சிவஸ்தலமாக இருந்தாலும் இந்த பகுதியில் இந்த கோவில் வெள்ளை பிள்ளையார் கோவில் என்றே அறியபடுகிறது . தடைபட்ட காரியங்கள்தடை விலகி நடை பெறுவதார்க்கு ஸ்வேதா விநாயகர் அருள் புரிவார் என்பது நம்பிக்கை .அதனால் இந்த விநாயாகர் பரிகார விநாயகர் என்றும் அறியபடுகிறது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக