பாண்டிச்சேரியில் உள்ளது மணக்குள விநாயகர் ஆலயம்.நகரின் மத்தியில் உள்ளது.ஆளுநர் மாளிகையின் பின்புறம் அமைந்துள்ளது இந்த ஆலயம்.500 ஆண்டு பழைமையான ஆலயம் இது.விநாயக சதுர்த்தி இங்கு விமரசியாக கொண்டாடப்படும்.ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோத்சவம் இங்கு பிரபலம். 18 நாட்கள் வெகு சிறப்பாக இந்த விழா கொண்டாடப்படும்.பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த சமயம், பல முறை பிரெஞ்சு ஆட்சியாளர்கள் விநாயகர் சிலையை அகற்ற முயற்சித்த பொழுது மீண்டும் மீண்டும் விநாயகர் அங்கு தோன்றிய அதிசயம் நடந்ததாக சொல்லப்படுகிறது.ஆண்டு திருவிழா நடத்த பிரெஞ்சு ஆதிக்க அதிகாரிகள் தடை விதித்த போது அதிக அளவில் மக்கள் சென்னைக்கு குடிபெயற முயற்சித்த பொழுது, இதனால் அங்கிருந்த பிரெஞ்சு ஜவுளி ஆலை பாதிக்க படும் என்று தெரிந்து( பெரும்பாலோர் ஜவுளி ஆலை தொழிலாளர்கள்) பிரெஞ்சு அரசு விழா நடத்த அனுமதித்தது.இறுதியில் பிரெஞ்சு துரை டுப்லே விநாயகர் பக்தராக மாறிய அதிசயமும் நடந்தது.கடலுக்கு மிக அருகில் மனற்பரப்புகளுக்கு மத்தியில் இருந்ததால் மணர்குள விநாயகர் என்ற பெயர் மருவி மணக்குள விநாயகர் என்றாகி விட்டது.கோவிலுக்குள் ஒரு சின்ன குளம்காண படுகிறது.இந்த இடம் சற்று இருள் சூழ்ந்து காணப்படுவதால் சூடன் ஒளியில் இந்த கிணற்றை பூசாரி பக்தர்களுக்கு அடையாளம் காட்டுகிறார்.தனி விநாயக ஆலயங்களில் மணக்குள விநாயகர் ஆலயம் மிகவும் பிரசத்தி பெற்றது.ஞாயிறு, 19 ஏப்ரல், 2009
மணக்குள விநாயகர் ஆலயம்,பாண்டிச்சேரி
பாண்டிச்சேரியில் உள்ளது மணக்குள விநாயகர் ஆலயம்.நகரின் மத்தியில் உள்ளது.ஆளுநர் மாளிகையின் பின்புறம் அமைந்துள்ளது இந்த ஆலயம்.500 ஆண்டு பழைமையான ஆலயம் இது.விநாயக சதுர்த்தி இங்கு விமரசியாக கொண்டாடப்படும்.ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோத்சவம் இங்கு பிரபலம். 18 நாட்கள் வெகு சிறப்பாக இந்த விழா கொண்டாடப்படும்.பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த சமயம், பல முறை பிரெஞ்சு ஆட்சியாளர்கள் விநாயகர் சிலையை அகற்ற முயற்சித்த பொழுது மீண்டும் மீண்டும் விநாயகர் அங்கு தோன்றிய அதிசயம் நடந்ததாக சொல்லப்படுகிறது.ஆண்டு திருவிழா நடத்த பிரெஞ்சு ஆதிக்க அதிகாரிகள் தடை விதித்த போது அதிக அளவில் மக்கள் சென்னைக்கு குடிபெயற முயற்சித்த பொழுது, இதனால் அங்கிருந்த பிரெஞ்சு ஜவுளி ஆலை பாதிக்க படும் என்று தெரிந்து( பெரும்பாலோர் ஜவுளி ஆலை தொழிலாளர்கள்) பிரெஞ்சு அரசு விழா நடத்த அனுமதித்தது.இறுதியில் பிரெஞ்சு துரை டுப்லே விநாயகர் பக்தராக மாறிய அதிசயமும் நடந்தது.கடலுக்கு மிக அருகில் மனற்பரப்புகளுக்கு மத்தியில் இருந்ததால் மணர்குள விநாயகர் என்ற பெயர் மருவி மணக்குள விநாயகர் என்றாகி விட்டது.கோவிலுக்குள் ஒரு சின்ன குளம்காண படுகிறது.இந்த இடம் சற்று இருள் சூழ்ந்து காணப்படுவதால் சூடன் ஒளியில் இந்த கிணற்றை பூசாரி பக்தர்களுக்கு அடையாளம் காட்டுகிறார்.தனி விநாயக ஆலயங்களில் மணக்குள விநாயகர் ஆலயம் மிகவும் பிரசத்தி பெற்றது.
லேபிள்கள்:
பாண்டிச்சேரி,
மணக்குள விநாயகர் ஆலயம்
தென்னாங்கூர் பாண்டுரெங்கன் ஆலயம்
தென்னாங்கூர்,திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஊர்.காஞ்சீபுரம்-வந்தவாசி சாலையில் உள்ளது.ஹரிதாஸ் கிரிதர சுவாமிகளால் எழுப்பப்பட்ட ஆலயம். தலை வாயில் ராஜகோபுரம் தென்னிந்திய பாணியிலும்,கருவறை விமான கோபுரம் பூரி ஜெகநாதர் ஆலயம் பாணியிலும் அமைந்துள்ளது. ஹரிதாஸ் கிரிதர சுவாமிகளின் குரு அவரது கனவில் வந்து பண்டரிபுரம் செல்ல சொல்கிறார்.அதன்படி அங்கு சென்ற சுவாமிகளுக்கு பண்டரிபுரம் கோவில் பூசாரி பாண்டுரெங்கன்-ரகுமாயி சிலைகளை கொடுத்துவிட்டு குரு ஞானாந்த சுவாமிகள் அவரின் கனவில் வந்து ஹரிதாஸ் சுவாமிகளிடம் குடுக்க சொன்னார் என்று சொல்கிறார்.அப்போது தான் ஹரிதாஸ் சுவாமிகளுக்கு பாண்டுரங்கன் ஆலயம் எழுப்பும் யோசனை வருகிறது.அந்த சிலைகளை உற்சவர்களாக கொண்டு பெரிய மூல ஸ்தான சிலைகள் அமைக்கபட்டு பாண்டுரங்கன் ஆலயத்தை ஹரிதாஸ் சுவாமிகள் எழுப்பினார்.பாண்டுரங்கன் ரகுமாயி சிலைகள்முறையே 10 1/2 அடி மற்றும் 8 1/2 அடி உயரத்தில் கம்பீரமாக உள்ளது.வரதராஜ பெருமாள் சீதேவி பூதேவியுடன் பஞ்சலோக சிலைகளாகவும் இங்கு காணலாம்.வெள்ளி கிழமைகளில் பாண்டுரங்கன்-ரகுமாயி திருப்பதி வெங்கடாசல பெருமாள்-மகாலக்ஷ்மி அலங்காரத்தில் காண்பது கண் கொள்ளா ஆட்சி. கருவறை கோபுரம் 120 அடி உயரம்.அதன் மேல் உள்ள தங்க விமானம் 10 1/2 டி உயரம்.மதுரை மீனாக்ஷி அம்மனுக்கும் தென்னான்கூருக்கும் ஒரு தொடர்பு உள்ளது.பாண்டிய மன்னன் குழந்தை வேண்டி தென்னாங்கூரில் தான் யாகம் நடத்துகிறார்.அந்த இடத்தில் தோன்றிய குழந்தை தான் மீனாக்ஷி. பாண்டிய மன்னன் அந்த குழந்தையை அழைத்து கொண்டு மதுரை சென்றதாக சொல்கிறது புராணம்.அப்படி சப்தரிஷிகளால் யாகம் மூலம் மீனாக்ஷி அவதரித்த இந்த ஸ்தலத்தை காஞ்சி மகா பெரியவர் 'மீனாக்ஷி தோன்றிய ஸ்தலம்' என்று குறிப்பிட்டுள்ளார்.கோவிலுக்கு பின்புறம் ஞானாந்த சுவாமிகளின் மடம் உள்ளது.அங்கு ஹரிதாஸ் கிரிதர சுவாமிகளுக்கு துளசி பிரிந்தாவனமும் உள்ளது.
லேபிள்கள்:
தென்னாங்கூர் பாண்டுரெங்கன் ஆலயம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)