முருகனுக்கு அறுபடை வீடு போல அய்யப்பனுக்கு ஐந்து திருத்தலங்கள்.அவை குளத்தூபுழை,ஆரியன்காவு,அச்சன்கோவில்,எருமேலி,சபரிமலை ஆகும்.பெருமாளின் 10 அவதாரங்களில் ஒருவரான பரசுராமன் தான் இந்த ஐந்து அய்யப்ப கோவில்களில் அமைய காரணமானவர் என்பது வரலாறு.செங்கோட்டையில் இருந்து அச்சன் கோவில் செல்ல மலை பாதை உள்ளது.செங்கோட்டையில் இருந்து 30 கி.மீ மலை மேல் அடர்ந்த காட்டில் உள்ளது இந்த ஐயப்பன் ஆலயம். செங்கோட்டையில் இருந்து தமிழக மற்றும் கேரள அரசு பேரூந்துகள் அச்சன் கோவில் செல்ல இயக்கப்பட்டு வருகிறது.ஆனால் நாங்கள் சென்ற நேரம் புனலூர் செங்கோட்டை மலைப்பாதை செப்பனிட்டு வந்த காரணத்தினால் கேரளாவில் இருந்து பேரூந்துகள் வர இயலாத நிலையில், பயணிகள் குறைவாக இருந்த காரணத்தால், இரண்டு அரசு போக்குவரத்து பேரூந்துகளும் தாற்காலிகமாக நிறுத்தி வைக்க பட்டிருந்தது.அதே காரணத்தினால் எங்களால் ஆரியன்காவு மற்றும் குளத்தூபுழை செல்ல முடியவில்லை.செங்கோட்டை பேரூந்து நிலையத்தில் இருந்து அச்சன் கோவில் சென்று வர டாக்சி 550 ரூபாய் கேட்கிறார்கள்.நாங்கள் அப்படி தான் சென்றோம்.அச்சன் கோவில் இருக்கும் மலை பகுதி கேரள மாநிலத்தின் எல்லைக்கு உட்பட்டது.போகும் வழியில் மணலார் மற்றும் கும்புவுருட்டி நீர்வீழ்ச்சிகள் உள்ளது.குற்றால அருவி போல இதுவும் ஒரு சுற்றுலா ஸ்தலமாக திகழ்கிறது.கோவிலில் இருக்கும் அயப்பன் விக்கிரகம் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.இங்கு கொடுக்கும் ஐயப்பன் சந்தனம் பாம்பு கடிக்கு பயன்படும் மருந்தாக பக்தர்கள் நம்புகிறார்கள்.அச்சன் கோவிலில் ஐயப்பன் பூர்ணா புஷ்கலா என்று இரண்டு தேவியருடன் காட்சி அளிக்கிறார்.ஐயப்பன் தனது ஐந்து திருதலங்களிலும் வேறு வேறு கோலத்தில் தரிசனம் தருகிறார்.குளத்தூபுழையில் பாலகனாகவும்,ஆரியங்காவில் இளைஞனாகவும் ,அச்சன் கோவிலில் குடும்பஸ்தனாக மனைவியருடனும்,எருமேலியில் காக்கும் கடவுள் தர்ம சாஸ்தாவாக்வும், சபரிமலையில் பிரம்மசாரியாகவும் காட்சி தருகிறார்.சாமியே சரணம் ஐயப்பா.
1 கருத்து:
திருவடியும், மகர ஜோதியும், பொன்னாம்பல மேடும் நமது உடலில் உள்ளது.
மேலும் அறிந்துகொள்ள http://sagakalvi.blogspot.com/2011/10/self-realization.html
ஐயப்பனை காண சபரிமலை செல்வதும் நம்மை நாம் அறிவதும் ஒன்று
கருத்துரையிடுக