நிமிஷாம்பா கோவில் ஸ்ரீரங்கபட்டினம் அருகில் உள்ள ஒரு கோவில் .பெங்களூரு மைசூரு நெடுஞ்சாலையில் உள்ளது ஸ்ரீரங்கபட்டினம் . இங்கிருந்து 2 கி.மீ தொலைவில் சங்கமம் (திரிவேணி சங்கம் என்ற இடம் உள்ளது .) 3 நதிகள் சேரும் இடம் .இது .காவேரி,கபினி மற்றும் ஹேமாவதி நதிகள் சேரும் இடத்தில் ஆற்றோரம் இந்த கோவில் உள்ளது . சுமார் 700 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவில் இது .ஸ்ரீரங்கபட்டினத்தில் இருந்து திப்பு சுல்தானின் கோடைகால அரண்மனையை தாண்டி சென்றால் சங்கமம் சென்றடையலாம் . நதிக்கரை ஓரம் இந்த கோவில் அமைந்திருக்கிறது . பார்வதியின் இன்னொரு பெயர் தான் நிமிஷாம்பாள் .நிமிஷாம்பாளை வேண்டி கொண்டால் ஒரு நிமிட நேரத்தில் வேண்டுல்தலை நிறைவேற்றி தருவாள் என்பது நம்பிக்கை .
இந்த கோவிலில் வரிசையாக மூன்று சன்னதிகள் உள்ளது . சிவ பெருமான் ,நிமிஷாம்பாள் ,மற்றும் லக்ஷ்மி நாராயணர் சன்னதி . இங்கு ஈஸ்வரன் சன்னதிக்கு எதிரே நந்தி சற்று விலகி இருப்பதை காணலாம் . அம்பாள் சன்னதிக்கு முன் ஸ்ரீசக்ரம் உள்ளது .இந்த ஸ்ரீ சகரத்திற்கு கும்கும அர்ச்சனை செய்யபடுகிறது .
இந்த கோவிலின் இன்னொரு சிறப்பு கோவில் பிரசாதம் பலி பீடத்தில் வைத்து விட்டு பூசாரி கோவில் மணியை ஒலிக்க செய்வார் . மணி ஒலித்த உடன் காக்கைகள் வரிசையாக ஒன்றின் பின் ஒன்றாக வந்து பலி பீடத்தில் வைத்துள்ள அன்னத்தை உண்பதை காணலாம் .மற்ற இடங்களில் காண்பது போல காக்கைகள் இங்கு கூட்டமாகவோ மொத்தமாகவோ வந்து பலி அன்னத்தை உண்பதில்லை. பல ஆண்டுகளாக தடைபட்டு வந்த திருமணங்கள் இங்கு வந்து வேண்டிய பின் உடனே நடக்கிறது என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.
.
பெங்களூர் ராஜராஜேஸ்வரி நகரிலும் ஒரு பெரிய நிமிஷாம்பாள் கோவில் உள்ளது . இது தவிர காட்டன்பெட் அருகேயும் ஒரு நிமிஷாம்பாள் கோவில் உள்ளது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக