தஞ்சாவூரில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது திட்டை.பிரளய காலத்தில் எல்லா இடங்களும் நீரால் சூழ் பட்டிருந்தது .ஆனால் சீர்காழியும் திட்டையும் நீரால் ழூழ படவில்லை .திட்டை என்றால் மேடு என்று பொருள் .சீர்காழி வட திட்டை என்றும் திட்டை தென் திட்டை என்றும் அன்று முதல் அறியபட்டது . இது ஒரு பாடல் பெற்ற ஸ்தலம் .வசிஷ்டர் வழிபட்டதால் மூலவர் வசிஷ்டீஸ்வரர் என்று அறியபடுகிறார். மூலவர் ஒரு சுயம்பு லிங்கம் .இது தவிர பசுபதி நாதர் என்றும் பசுபதீஸ்வாரர் என்றும் மூலவருக்கு பெயர்கள் வழக்கத்தில் உள்ளது .அம்மன் உலக நாயகி, மங்களாம்பிகை , சுகுந்த மங்களாம்பிகை என்று பல பெயர்களால் அறியபடுகிறார்.அம்மன் சன்னதிக்கு முன் கூரையில் 12 ராசிகளுக்கும் ராசி சக்கரம் சிற்ப வடிவில் அமைக்கப்பட்டுள்ளது .12 ஆம் நூற்றாண்டில் சோழ மன்னர்களால் கட்ட பட்டது இந்த கோவில்.
இந்த கோவிலின் தனி சிறப்பு இறைவன் வசிஷ்டேஸ்வரர் சன்னதியில் உள்ள உட்புற கோபுரத்தில் சந்திர காந்தக் கல் வைத்து கட்டப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது. 24 நிமிடத்திற்கு அதாவது ஒரு நாழிகைக்கு ஒரு முறை இந்த சந்திர காந்தக்கல்லால் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி கல்லிலிருந்து ஒரு சொட்டு நீர் இறைவன் வசிஷ்டேஸ்வரர் மீது எப்பொழுதும் விழுந்து கொண்டிருக்கும் .கூர்ந்து கவனித்தால் இதை பார்கக முடியும்.இன்னொரு சிறப்பு ராஜா தக்ஷிணாமூர்த்தி சன்னதி. இங்கு குருவுக்கு தனி சன்னதி உள்ளது. அம்மன் சன்னதிக்கும் ஈஸ்வரன் சன்னதிக்கும் நடுவில் தனி சன்னதி கொண்டிருக்கிறார் குரு பகவான் . இங்கு குரு நின்ற கோலத்தில் 4 கைகளுடன் காணபடுகிறார்.சித்ரா பௌர்ணமி அன்றும் குரு பெயர்ச்சி அன்றும் இங்கு சிறப்பாக கொண்டாடபடும் . இந்த ஆலயம் முழுவதுமே கற்களால் கட்டபட்டது . கோவில் சுவர்கள் ,கூரை , கொடி மரம் என்று அனைத்துமே கற்களால் கட்டபட்டது. இந்த கோவிலின் தீர்த்தம் சந்திர தீர்த்தம் என்ற பெயரால் அறியபடுகிறது. ஆலயத்தின் முன்புறம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் 15, 16, 17 தேதிகளில் காலையில் சூரியபகவான் ஒளி இந்த இறைவன் மீது படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக