திண்டிவனம் பாண்டி சாலையில் திருச்சிற்றம்பலம் விலக்கு என்ற இடத்தில் பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயம் உள்ளது. இந்த இடத்திற்கு பெயர் பஞ்சவடி. திண்டிவனம் பாண்டி சாலையில் 29 வது கி.மீ லும் ,பாண்டியில் இருந்து திண்டிவனம் சாலையில் 9 வது கி.மீ லும் உள்ளது. பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை 36 அடி உயரத்தில் கம்பீரமாக நிற்கிறது. நடுவில் ஆஞ்சநேயர் முகமும் சுற்றிலும் கருடர், ஹயக்ரீவர், நரசிம்ஹர், வராஹர் முகங்கள் உள்ளது. ஆஞ்சநேயரின் உக்கிரத்தை குறைப்பதற்கும் , ஆஞ்சநேயரின் அநுகிரஹத்தை பெறவும் உளுந்து வடை மாலை சார்த்துகிறார்கள். அஞ்சநேய தரிசனத்தால் சனி தோஷ நிவர்த்தியும் கிடைக்கிறது. காலை ஐந்து மணியில் இருந்து இரவு ஒன்பது மணி வரை இந்த ஆலயம் திறந்த்திருக்கும்.வியாழன், 28 ஆகஸ்ட், 2008
பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர்
திண்டிவனம் பாண்டி சாலையில் திருச்சிற்றம்பலம் விலக்கு என்ற இடத்தில் பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயம் உள்ளது. இந்த இடத்திற்கு பெயர் பஞ்சவடி. திண்டிவனம் பாண்டி சாலையில் 29 வது கி.மீ லும் ,பாண்டியில் இருந்து திண்டிவனம் சாலையில் 9 வது கி.மீ லும் உள்ளது. பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை 36 அடி உயரத்தில் கம்பீரமாக நிற்கிறது. நடுவில் ஆஞ்சநேயர் முகமும் சுற்றிலும் கருடர், ஹயக்ரீவர், நரசிம்ஹர், வராஹர் முகங்கள் உள்ளது. ஆஞ்சநேயரின் உக்கிரத்தை குறைப்பதற்கும் , ஆஞ்சநேயரின் அநுகிரஹத்தை பெறவும் உளுந்து வடை மாலை சார்த்துகிறார்கள். அஞ்சநேய தரிசனத்தால் சனி தோஷ நிவர்த்தியும் கிடைக்கிறது. காலை ஐந்து மணியில் இருந்து இரவு ஒன்பது மணி வரை இந்த ஆலயம் திறந்த்திருக்கும்.
லேபிள்கள்:
திண்டிவனம்,
பஞ்சமுக ஆஞ்சநேயர்,
பஞ்சவடி,
பாண்டிச்சேரி
வெள்ளி, 15 ஆகஸ்ட், 2008
கோடி லிங்கேஸ்வரர் ஆலயம்


கோடி லிங்கேஸ்வரர் ஆலயம் பெங்களுருவில் இருந்து நூறு கி.மீ.தொலைவில் உள்ளது.கோலார் அருகே BEML நகரில் கம்மசந்த்ரா என்ற இடத்தில் உள்ளது.ஒரு கோடி சிவ லிங்கங்கள் பிரதிஷ்டை செய்வது தான் கோவில் நிர்வாகத்தினரின் இலக்கு. ஆனால் தற்பொழுது சுமார் எழுபது லக்ஷம் சிவ லிங்கங்கள் இருக்கிறது. பக்தர்கள் மேலும் மேலும் புதிதாக சிவ லிங்கங்கள் பிரதிஷ்டை செய்து கொண்டிருக்கிறார்கள்.சிறிது,நடுத்தரம் மற்றும் பெரிய வடிவங்களில் பல தரப்பட்ட சிவ லிங்கங்களை இங்கு காணலாம். இங்குள்ள 108 அடி உயர சிவ லிங்கம் தான் உலகத்திலேயே பெரியது என்று சொல்லப்படுகிறது.அதே போல 40 அடி உயர நந்தி ஒன்றும் இங்கும் உள்ளது. தெலுங்கில் சிவனை குறித்து வந்த திரைப்படம் "ஷரீ மஞ்சுநாதர் " முழுவதும் இங்கும் தான் படமாக்க பட்டது.வேறு எங்கும் பார்க்க முடியாத ஓன்று என்ற வகையில் இந்த கோவில் சற்று வித்யாசமானது.கோடி லிங்கங்கள் தவிர பாண்டுரெங்கன்,காளிதேவி ,சந்தோஷி மாதா,அன்னபூர்ணேஸ்வரி சன்னதிகள் இந்த கோவிலில் உண்டு .
லேபிள்கள்:
கோடி லிங்கேஸ்வரர்,
கோலார்,
சிவ லிங்கம்,
நந்தி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)